2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருக்குமா?
உண்மை என்ன

பிரதமர் மோடி அவர்கள்  கடந்த 2016-ம் ஆண்டு
புழக்கத்திலிருந்த, 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்தார

அதற்க்கு பதிலாக புதிய 2,000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில் இன்று காலையிலிருந்து, சமூக வலைதளங்களில் சிலர்

இந்தியன் வங்கி வரும் மார்ச் 1ம் தேதி முதல், 2,000 ரூபாய் நோட்டுக்களின் பரிவர்த்தனையை நிறுத்தவுள்ளதாக ஒரு செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள்

இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது

அந்த செய்தியின் உண்மை என்ன

தற்போது ஏ.டி.எம்.,களில் பணம் எடுப்பவர்கள், 4,000, 10,0000 என, எடுத்தால், முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளே வருகின்றன. 

இதனால் பலரும்  வங்கிக்கு  வந்து சில்லறை கேட்கின்றனர்.

எனவே வரும் மார்ச் 1ம் தேதி முதல், 2,000 ரூபாய் நோட்டுக்களை, ஏ.டி.எம்.,களில் வைப்பதில்லை என, இந்தியன் வங்கி முடிவெடுத்துள்ளது.

அதாவது மார்ச் 1ம் தேதி முதல், இந்தியன் வங்கி ஏ.டி.எம்.,களில், 500, 200, 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே நிரப்பப்படும். 2,000 ரூபாய் நோட்டுகள் உள்ள பெட்டி  நிரப்பப்பட மாட்டாது

அதனை அனைவரும் தவறாக புரிந்து கொண்டு  தவறான கருத்தை பரப்பி வருகின்றனர்.
Share To:
Share To:

அட்மின்மீடியா

Post A Comment:

0 comments so far,add yours