Breaking News

வங்கியில் NPR ஆவணம் காட்டினால் தான் வங்கி கணக்கு இயக்க்கமுடியுமா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
NPR ல் பதிவு செய்து ஒப்புகை  சீட்டை வங்கிகணக்கில் சமர்பித்தால் மட்டும் வங்கிகணக்கு செயல் படும்(NPR ஒப்புகை சீட்டை optional ஆக இப்போது வைத்திருக்கிறார்கள்) CBI வங்கி விளம்பரம் செய்திருக்கிறது.NPR ,NRC கொண்டு வந்து அவர்கள் வங்கி கணக்கை முடக்குவதை விட இப்பொழுதே நாம் வங்கி புறகணிப்பில் ஈடுபடவேண்டும். நீங்கள் சார்ந்திருக்கும் கட்சி இயக்க தலைமைகளுக்கு இச்செய்தியை கொண்டுசேருங்கள். வங்கி புறகணிப்பு போராட்டம் மட்டுமே உடனடி தீர்வு தரும்.

என கடந்த மூன்று நாட்களாக சமூக வலைத்தளங்களில் தினத்தந்தி நாளிதழில் வெளியிட்டதை போன்று  ஒரு செய்தி உலாவிக் கொண்டிருக்கிறது 

அதாவது Central Bank of India  என்கிற வங்கி kyc ஆவணங்களை சமர்ப்பிக்க அவர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு ஒரு சில பட்டியல்களை வெளியிட்டு உள்ளது 

இந்த செய்தி உண்மையா என்று பலரும் அட்மின் மீடியாவிடம் கேட்க அட்மின் மீடியா அதை ஆய்வு செய்தது

ஆம் அந்த செய்தி உண்மைதான்


ஆனால் அதே சமயம் வங்கி தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு KYC ஆவணங்கள் சம்மந்தமாக இரு விளம்பரம் வெளியிட்டு இருந்தது அதில் NRP- தேசிய மக்கள் பதிவேட்டில் வழங்கப்பட கடிதம்  என்று ஒரு வரியும் அதில் இடம் பெற்றுள்ளது

இந்த விளம்பரம் சமுக வலைத்தளத்தில் பரவி  அனைவரும் பேசும் பொருளாக மாறியது 

அதன் பிறகுஅதன் நிலைப்பாட்டை  மாற்றி பின்வாங்கியுள்ளது.

வங்கியால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில்,  “என்.பி.ஆர்  ஆவணம் கட்டாயமில்லை. இது ஒரு கூடுதல் ஆவணம், ”என்று ரெய்ன் பஜார் கிளையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
வங்கியின் மறுப்பு பலவீனமாக உள்ளது, ஏனெனில் அது ஏன் முதலில் வழங்கப்பட்டது, ஏன் பின்வாங்குகிறது என்று சொல்லவில்லை.

மேலும் அனைத்து வங்கியில் kyc என்பது கட்டாயம்

KYC ஆவணங்களில் மேலே உள்ள விளம்பரத்தில் உள்ள ஏதாவது ஒன்று கொடுத்தால் போதும்  அனைத்தும் கொடுக்க வேண்டியதில்லை

அட்மின் மீடியா ஆதாரம்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback