Breaking News

நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தேசிய மக்கள் தொகை பதிவேடு NPR என்றால் என்ன? முழு விவரம்

அட்மின் மீடியா
0
தேசிய மக்கள் தொகை பதிவேடு என்றால் என்ன?

WHAT IS NATIONAL POPULATION REGISTER?

                              What is    NPR?                Part-1

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் தங்கள் பெயரைப் பதிவு செய்வது கட்டாயமாகும். 


நாட்டின் எந்தப் பகுதியிலும், யார் குறைந்தபட்சம் 6 மாதங்கள் அல்லது அதற்கு மேல் வசித்தாலும் அவர்கள் என்பிஆர் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புள்ளிவிவரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் பயோமெட்ரிக் தகவலும் இடம் பெறும்.


NPR என்பது இப்போது உருவாக்க பட்டது இல்லை இதன் முதல் பதிவேடு 2010ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது 2015ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. அடுத்த புதிப்பிக்கும் பணி வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரையில் நடைபெறும். மேலும்  இந்த புதுப்பித்தல் பணி அசாம் மாநிலம் தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் நடைபெற உள்ளது
 
மேலும் இதில் பதிவு செய்தவர்களுக்கு தனியாக ஓர் அடையாள அட்டை கொடுக்கப்படும்

என்பிஆர்ன்  நோக்கம் தான் என்ன ?

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு  குடிமகனின் முழுமையான அடையாள அட்டையை உருவாக்குவதே தேசிய குடிமக்கள் பதிவேடாகும். இந்தப் பணிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர், மற்றும் தலைமைப் பதிவாளர் தலைமையின் கீழ் நடைபெறும்.

இந்தப் பதிவேட்டில் தனிமனிதர் ஒருவரின் வழக்கமான வசிப்பிடம், பெயர், குடும்பத் தலைவர், தந்தை பெயர், தாய் பெயர், திருமணமாகி இருந்தால் மனைவி பெயர், பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், தேசியம், தற்போது வசிக்கும் இடத்தின் முகவரி, தற்போது வசிப்பிடத்தின் காலம், நிரந்தர முகவரி, தொழில், கல்வித் தகுதி ஆகிய விவரங்கள் கேட்கப்படும். இதற்கான அரசாணை கடந்த ஆகஸ்ட் மாதமே பிறப்பிக்கப்பட்டுவிட்டது.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்ய என்னென்ன தேவை?

ஒவ்வொரு குடிமகனின் தனிப்பட்ட விவரங்கள் இதில் சேகரிப்படுகின்றன.

21 மிக முக்கியமான தகவல்கள் இதில் கேட்கபடுகின்றன

குடியிருப்போரின் பெயர், பெற்றோரின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம், கடைசியாக குடியிருந்த இடம், பான் அட்டை எண், ஆதார் அட்டை எண், வாக்காளர் அடையாள அட்டை எண், ஓட்டுநர் உரிமம் எண் மற்றும் போன் நம்பர் உள்ளிட்ட 21 தகவல்கள் இதில் இடம்பெறும். 

2010ம் ஆண்டு இதில் 15 விபரங்கள் மட்டுமே கேட்க்கபட்டது தற்போது  இதில்
புதியதாக இணைக்கப்பட்ட இந்த 7 விபரங்கள் தான் இன்று விவாதப் பொருளாகவும், பல தரப்பினரும் களத்தில் இறங்கி போராடுவதற்கும் காரணமாக உள்ளது.

7 new fields in the NPR form

Last place of residence:
Passport number:
Aadhaar ID:
Voter ID card number:
Driving license number:
Mobile phone number:

Date and birth place of Parents:


The older NPR sought the following information

Name of Person:
Relationship to head of household:
Father’s name:
Mother’s name:
Spouse’s name (if married):
Sex:
Date of Birth:
Marital Status:
Place of Birth:
 
Nationality as declared:
Present address of usual residence:
Duration of stay at present address:
Permanent residential address:
Occupation/Activity:
Educational qualification:

இந்த NPR சுற்றியுள்ள சர்ச்சை தான் என்ன? இதனை ஏன் எதிர்க்கின்றார்கள்?

அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவு NRC  மூலம் 19 லட்சம் மக்களை நீக்கியதன் பின்னணியில், இது NPR வருகிறது. நாடு முழுவதும் NRC செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ள நிலையில்,  இந்தியாவில் வசிப்பவர்கள் குறித்து மிகப் பெரிய அளவிலான தனிப்பட்ட தகவல்களை  சேகரிக்க NPR விரும்புகிறது. NRC ன் முதல் படி தான் இந்த NPR என்பதாகும்.
கடந்த முறை 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் (சென்சஸ்) போது கேட்கப்பட்ட கேள்விகள் இந்த ஆண்டும்  சென்சஸ் கணக்கெடுப்பு நடத்தியிருந்தால் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இருந்திருக்காது...

ஆனால் தற்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு NPR மூலம் இதை விட கூடுதலாகவும், சம்பந்தமில்லாமலும் சில  கேள்விகள் கேட்பதால் தான் NPR க்கு எதிராக நாட்டு மக்கள் போராடி வருகிறார்கள்..

NPR ல் கேட்கப்பட்ட கேள்விகளில் நாம் பதிலளிக்க முடியாதவாறும் , அப்படியே நாம் பதில் அளித்தாலும் அதற்கு உரிய ஆவணங்களை சமர்பிக்க முடியாத படியும்  கேள்விகள் கேட்டுள்ளார்கள்...

இதில் NPR  கேட்கப்பட்டவைகளுக்கு பதிலளிக்க முடியாத போது நமது பெயர் NRC ஆவணத்தில் இடம் பெறாது..

NRC இல் இடம் பெறாமல் போனால் அடுத்து குடியுரிமை திருத்தச் சட்டத்தின் CAA படி நாம் இந்திய குடிமகன் இல்லை என்று அறிவித்து நம்மை அகதிகள் (தடுப்பு) முகாமில் அடைத்து விடுவார்கள்..

ஆக...

NPR தான் நம்மை இந்தியன் இல்லை என்று அறிவிப்பதற்கு கொண்டு வந்துள்ள தொடக்க சதி என்று சொன்னால் மிகையாகாது


தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR) மற்றும் தேசிய இந்தியக் குடியுரிமைப் பதிவேடு NRC இரண்டும் தனித்தனியானது. இரண்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று சொல்லுகிறது மத்திய அரசு

ஆனால் குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதற்கான சட்ட ஆணையில் NRC தயாரிப்பதற்கான முதல் படிநிலையைக் குறிப்பிடுகிறது. குடியுரிமைச் சட்டம் 2003 விதி 3ன் துணை விதி(5) இவ்வாறு கூறுகிறது, “மக்கள் தொகைப் பதிவேட்டில் (NPR) இருந்து சரிபார்ப்பிற்குப் பிறகு உள்ளூர் குடியுரிமை அடங்கியவர்களின் விவரங்கள் இருக்கும்.

அதாவது, NPRக்குப் பிறகே NRCக்கான பட்டியல் தயார் செய்யப்படும்.

ஆதாரம்

http://censusindia.gov.in/2011-Act&Rules/notifications/citizenship_rules2003.pdf
இணைந்து இருங்கள் NRC யை அடுத்த பதிவில் பார்ப்போம்.

Tags: முக்கிய அறிவிப்பு

Share this