பேஸ்பு,க், வாட்ஸப்,டிவிட்டர், போன்றவற்றில் ஆபாச கருத்து, மற்றும் ஆதாரமில்லாமல் செய்தி போடுபவர்களை பிடிக்க தனி பிரிவு உருவாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
அட்மின் மீடியா
0
பேஸ்பு,க், வாட்ஸப், டிவிட்டர், போன்றவற்றில் ஆபாச கருத்து, மற்றும் ஆதாரமில்லாமல் செய்தி போடுபவர்களை கண்டறிய 2 மாதத்திற்குள் சிறப்புப் பிரிவை அமைக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஆதாரமின்றி அவதூறு பரப்புவோரை கண்காணிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தற்போது பெரும்பான்மையானோர் பல்வேறு நோக்கத்துக்காக உபயோகப்படுத்துகின்றனர். எனினும் ஆதாரமின்றி பரவும் பல்வேறு செய்திகள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது.
வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தற்போது பெரும்பான்மையானோர் பல்வேறு நோக்கத்துக்காக உபயோகப்படுத்துகின்றனர். எனினும் ஆதாரமின்றி பரவும் பல்வேறு செய்திகள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது.
சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர் நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக சில கருத்துகளை பதிவிட்டு இருந்தார்.
இது தொடர்பாக அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில் அவர் ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக வலைதளங்களில் கடுமையாக ஆபாச வார்த்தைகளைப் போட்டு அவதூறாக கருத்து தெரிவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, இது போன்று சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துக்கள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எந்த ஒரு முறையான நடைமுறையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
எனவே, சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்களைப் பதிவு செய்பவர்களை கண்டறிய மாவட்ட மற்றும் மாநில அளவில் அனைத்து காவல்நிலையங்களிலும் 2 மாதத்திற்குள் சிறப்பு பிரிவை அமைக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டார்.
Tags: முக்கிய செய்தி
