Breaking News

அடுத்த அதிரடி : வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இனைக்கனும் : விரைவில்

அட்மின் மீடியா
0
வாக்காளர் அட்டைகளை ஆதார் எண்களுடன் இணைப்பதற்கான தேர்தல் ஆணையத்தின் கோரிக்கைக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது
போலி வாக்காளர்களை தடுக்கும் பொருட்டு, வாக்காளர் அட்டைகளுடன் ஆதார் எண்களை இணைக்க அதிகாரம் வழங்க வலியுறுத்தி, மத்திய சட்ட அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதியிருந்தது. 

வாக்காளர்கள் ஆதார் எண்களை தர இயலவில்லை என்றாலும் கூட, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படாது எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

எனவே விரைவில் தேர்தல் ஆனையம் வாக்காளர் அட்டைகளை ஆதார் எண்களுடன் இணைக்குமாறு அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகின்றது

Give Us Your Feedback