Breaking News

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆவணங்கள் அளிக்கவேண்டுமா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0

தேசிய மக்கள் தொகை பதிவு NPR க்கு எந்த ஆவணங்களும் கொடுக்கப்பட வேண்டியதில்லை என  மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்க உள்ளது  ஏப்ரல் முதல் செப்.,வரை வீடு வீடாக சென்று தேசிய மக்கள் பதிவேடு புதுப்பிக்கும் நடக்க உள்ளது.

 இதற்காக கணக்கெடுக்க வருபவர்களிடம், பொது மக்கள் ஆவணங்கள் வழங்க வேண்டும். இதற்காக பழைய ஆவணங்களை தோண்டி எடுக்க வேண்டும். அதனை உறுதிப்படுத்த ஆவணங்களை, அதிகாரிகள் பார்வையிடுவார்கள் என அதிகாரி ஒருவர் கூறியதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது

இதற்கு மத்திய உள்துறை மறுப்பு தெரிவித்து உள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவில் ஒரு குடியிருப்புவாசியின் கீழ்க்கண்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

1. நபரின் பெயர்

2. குடும்பத் தலைவருடனான உறவுமுறை

3. அப்பாவின் பெயர்

4. அம்மாவின் பெயர்

5. மனைவி/கணவர் பெயர்

6. பாலினம்

7. பிறந்த நாள்

8. திருமண விவரம்

9. பிறந்த இடம்

10. குடியுரிமை

11.தற்போதைய முகவரி

12.தற்போதைய முகவரியில் தங்கியிருக்கும் காலம்

13.நிரந்தர முகவரி

14.தொழில்/வேலை

15.கல்வித் தகுதி

ஆகியன கொண்ட ஒரு பதிவேட்டில் மேற்கண்ட தகவல்கள் அளிக்கவேண்டும்
  
தேசிய மக்கள்தொகை  கணக்கெடுப்புக்காக எந்தவொரு நபரும் எந்தவொரு ஆவணத்தையும்  அவரது வீட்டுக்கு வருகை தரும் கணக்கீட்டாளருக்கு  சமர்ப்பிக்க தேவையில்லை. 

தனிநபர் வழங்கிய தகவல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கேற்ப பதிவு செய்யப்படும். என உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Tags: மறுப்பு செய்தி

Share this