Breaking News

அப்துல்கலாம் அரசியல் ஆலோசகர் பொன்ராஜ் அவர்களின் திட்டத்தினை மான் கி பாத்தில் பாராட்டிய மோடி!

அட்மின் மீடியா
0
தமிழகம் கொடுத்த புது ஐடியா.. அனைத்து மாநில மக்களும் பின்பற்ற வேண்டும்..  மான் கி பாத்தில் பாராட்டிய மோடி!

பயன்படுத்தாத ஆழ்துளை கிணறுகளில் எப்படி மழை நீர் சேகரிப்பது என்று தமிழகம் புதிய திட்டத்தை வகுத்துள்ளது, அவர்களை நாம் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி மான் கி பாத் உரையில் குறிப்பிட்டுள்ளார்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25 ம் தேதி திருச்சி அருகே ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித் ஆழ்குழாய் கிணற்றிலேயே மரணம் அடைந்து விட்டான்

அப்போது அரசு உடனடியாக பயன் அற்று இருக்கும் அனைத்து ஆழ்குழாய் கிணறுகளையும் மூட உத்தரவிட்டது

அப்போது நம் அட்மின் மீடியா  பயனற்று இருக்கும்  ஆழ்துளை கிணறுகளை  மழை நீர் சேகரிப்பின் மூலம் மீண்டும் எப்படி பயன்படுத்த முடியும் என்று  விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.அரசுக்கும் கோரிக்கை வைத்தோம்

ஆழ்குழாய் கிணற்றை மூடாதீர்கள்!



 தமிழக அரசின் உத்தரவை அறிந்த அப்துல் கலாம் அவர்களின் அரசியல் ஆலோசகர் வெ. பொன்ராஜ் அவர்கள் ஆழ்குழாய் கிணறுகளை மூடு என்ற கோரிக்கை சரியானதா? அது தவறான முடிவு? என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.மேலும் ஆழ்குழாய் கிணறுகளை எப்படி மழைநீர் சேகரிப்பு கிணறுகளாக மாற்றவேண்டும் என்று அட்மின் மீடியாவுக்கும் ஆலோசனை வழங்கினார்

உடனடியாக தமிழக அரசும் ஆழ்குழாய் கிணறுகளை மூடாதீர்கள் மழைநீர் சேகரிப்பு கிணறுகளாக மாற்றுங்கள் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டது



இந்த திட்டத்தினை தான் தற்போது  தமிழகம் கொடுத்த புது ஐடியா.. அனைத்து மாநில மக்களும் பின்பற்ற வேண்டும்.. என்று  மான் கி பாத்தில் மோடி அவர்கள் பாராட்டியுள்ளார்

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback