Breaking News

ஆழ்குழாய் கிணற்றை மூடாதீர்கள்!

அட்மின் மீடியா
0
ஆழ்குழாய் கிணற்றை மூடாதீர்கள் அதனை மழை நீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றுங்கள் என்ற 
நம் அட்மீன் மீடியாவின் ஆக்கபூர்வ சிந்தனை சரியானதா.?

தொடர்ந்து ஆழ்துளை கிணறுகள் மூலம் நடக்கும் விபத்துகளை தடுக்கவும் நாம் சொன்ன வழி சரியானதா.?

இதோ சமூக ஆர்வலர் பொன்ராஜ் சொல்கிறார் கேளுங்கள்


ஆழ்துளை கிணறுகளை மூலம்  இனி ஒரு மரணம்  நடக்காமல் இருக்க ஒவ்வொரும் இளைஞர்களும் முயன்றால் தான் முடியும். 

ஒரு முறை போடபட்ட போர்வேல் நிச்சயம் பயன்படுத்தலாம். அதற்கான வழிமுறைகள் நிறைய இருக்கிறது.
தண்ணீர் வரவில்லை என்று அந்த போர்வேல்களை மூடுவது என்பதை  தற்காலிகமானது அதை எப்படி மறு பயன்பாட்டி கொண்டு வரலாம் என்பதற்கு நிறைய வழிமுறைகள் இருக்கிறது. அதனை மழை நீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றும் அட்மின் மீடியாவின் சிந்தனை வரவேற்க்கதக்கது

இதை போல் செய்வதால் பயன்பாடமல் இருக்கும் போர் வேல்களை மறுபயன்பாட்டிற்கு கொண்டு செல்ல இயலும்.

மற்றும் ஆழ்துளை கிணறுகளை மண் போட்டு மூடாதீர்கள், மழை நீர் செறிவூட்டும் கிணறாக மாற்றுங்கள். 

இதனால் அந்த கிணறு மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்ற முடியும்

அரசு சிறிய முயற்சி எடுத்தால் 100 நாள் வேலை திட்டத்தில் ஒவ்வொரு ஆழ்துளை கிணறுகளையும் அரசே பாதுகாப்பாக மூட முடியும். அல்லது மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்ற முடியும்.

இதற்கான ஒரு உதாரணம் நம் வேலூர் மாவட்ட நிர்வாகமும் வாழும் கலை அமைப்பும் சேர்ந்து மழை நீர் செறிவூட்டும் கிணறை 100 நாள் வேலை திட்டத்தில் 2500 கிணறுகளை உருவாக்கி, மாற்றி அமைத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தியிருக்கிறார்கள். 

இதை போல் நாமும் நம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுங்கள். 

அவர்கள் செய்ய வில்லை என்றால் அந்த தகவல்களை எங்களுக்கு அனுப்புங்கள், அதை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று தமிழகத்தில் உள்ள அனைத்து உபயோகமற்ற திறந்த வெளி ஆழ்குழாய் கிணறுகளையும் நிலத்தடி நீர் சேமிப்பு கிணறாக மாற்றுவோம். 

சுஜித்தின் மரணம் நமக்கு  ஈடு செய்ய முடியாத  வருத்தமாக இருந்தாலும் அவன் நமக்கு விட்டு சென்ற அறிவுரை மழை நீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு.

ஆழ் குழாய் கிணற்றில் விழுந்தது சுஜித்தே இறுதியாக இருக்கட்டும் இனி ஒரு மரணம் வேண்டாம்

நாளைய உலகம் இளைஞர்களின் கையில் என்ற அப்துல் கலாம் கண்ட கணவை நனவாக்குவோம் 

வெ. பொன்ராஜ்
Ponraj Vellaichamy
(அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர்)
Ponraj Vellaichamy

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback