Breaking News

கடன் தொல்லையால் காருக்குள் தீ வைத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை போலீசார் விசாரனையில் அதிர்ச்சி தகவல்

அட்மின் மீடியா
0

நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த பெட்டைக்குளத்தில், ஆற்றங்கரை பள்ளிவாசல் செல்லும் காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் இருந்த காரிலிருந்து 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 17.03.2026 அன்று நிகழ்ந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தில் சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது ரபி, நஸ்ரின் பாத்திமா மற்றும் அவர்களது 2 குழந்தைகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.



நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த பெட்டைக்குளத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கார் ஒன்று எரிந்த நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது கார் முழுவதும் தீக்கிரையான நிலையில், காரின் உள்ளே 4 உடல்கள் எரிந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது.

மீட்கப்பட்ட உடல்களைப் பரிசோதித்தபோது, இரண்டு குழந்தைகளும் தங்களது தாயைக் கட்டிப்பிடித்த நிலையிலேயே உயிரிழந்திருப்பது காண்போரை நிலைகுலையச் செய்துள்ளது. மரணத்தின் விளிம்பிலும் தாயின் அரவணைப்பைத் தேடிய அந்தப் பிஞ்சுகளின் நிலை மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களையே கண்கலங்க வைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திசையன்விளை போலீசார் மற்றும் வள்ளியூர் டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் காரை ஆய்வு செய்தனர்.மேலும் தடய அறிவியல் துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்றது 

காரில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது ரபி, நஸ்ரின் பாத்திமா மற்றும் அவர்களது 2 குழந்தைகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை ஆத்தங்கரை பள்ளிவாசல் பகுதியில் உள்ள முகைதீன் ஆண்டவர் தர்காவிற்கு சென்று சஹர் உணவு சாப்பிட்டு நோன்பு வைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். 

பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு சென்று குடும்பத்துடன் இந்த விபரீத முடிவு எடுத்தது. விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து காரில் தொழில்நுட்ப கோளாறு எரிபொருள் கசிவு என ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என்கிற கோணத்திலும் பொலீசார் விசாரணை நடத்தினர். 

தடயவியல் ஆய்வு மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சம்பவத்தின் முழுமையான உண்மையை கண்டறிவதற்காக போலீசார் தீவிர ஆய்வில் ஈடுபட்டனர். இதில் தீயில் எரிந்து கருகிய கார் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. 

பின்னர் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பெட்ரோலை தன் மீதும் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் மீதும் முகமது ரபி ஊற்றிக்கொண்டு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த முகமது ரபி உடல் முழுவதும் எறிந்து சாம்பலாகி இருக்கிறார். பின் இருக்கையில் இருந்த இரண்டு குழந்தைகளும் தங்களுடைய தாயார் நஸ்ரீன் பாத்திமாவைகட்டி இணைத்தபடி எலும்பு கூடாக இருந்த காட்சி பார்ப்போரின் இதயங்களை நொருங்கச் செய்திருக்கிறது. 

இது தொடர்பாக மேலும் மேற்கொண்ட விசாரணையில் சென்னையில் உள்ள வீட்டை விற்று கடனை செலுத்திய போதும் முழுமையாக கடனை அடைக்க முடியாமல் முகமது ரபி கடும் மன உளைச்சலில் இருந்தது தெரிய வந்தது. கடன் கொடுத்தவர்கள் தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்து வந்ததால் தன்னுடைய குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

இருந்தபோதும் வேறு ஏதேனும் தனிப்பட்ட காரணமும் உள்ளதா என்கிற கோணத்திலும் போலீசார் தொடர்ச்சியாக விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையே உயிர் இழப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு ஆத்தங்கரை பள்ளிவாசல் அருகே அவர்களது உடைமைகளை தானமாக கொடுத்தது. சிசிடிவி கேமராவிலும் பதிவாகி இருக்கிறது. 

தற்கொலை செய்த நான்கு பேரையும் முகமது ரபியின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகே உள்ள உறவினர்கள் அடையாளம் கண்டு உறுதி செய்திருக்கின்றனர். காரில் எரிந்த நிலையில் 4 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் திசையன்விளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback