Breaking News

போன் இன்கம்மிங் கதிர்வீச்சால் ஸ்டீல் வூல் எரிகிறதா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஓர் வீடியோவினை ஷேர் செய்கின்றார்கள் . அந்த வீடியோவில் பாருங்கள் உங்கள் போனின் கதீர் வீச்சை பாருங்கள் எனவே படுக்கும்போது  உங்களின் தலைக்கு அருகே,உங்கள் போனை வைக்காதீர்கள் என்று ஷேர் செய்கின்றார்கள்




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின உண்மைஎன்ன அது போல் அந்த ஸ்டீல் வுல் எரியுமா என்று உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


ஆம் அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

மேலும் இந்த செய்தி பரவலாக பரவி வரும் அந்த வீடியோவினை பற்றி மட்டுமே


அதற்க்காக போனில் கதீர் வீச்சு பாதிப்பு இல்லை என்று அர்த்தம் இல்லை
அதே சமயம் இது போல் பொய்யான வீடியோவினை பரப்பி மக்களை பீதி யாக்க கூடாது என்பதற்க்காக


செல்போனில் இருந்து கதிர்வீச்சு வெளியிடப்படுகிறது என்பதை பலரும் அறிந்து இருப்போம் ஆனால் ஒரு இன்கம்மிங் அழைப்பிற்கு ஸ்டீல் வூல் எரியும் அளவிற்கு கதிர்வீச்சு இருக்குமா என்பதை யோசிக்க வேண்டும்.

ஆனால் அந்த  வீடியோவில் செல்போன் அழைப்பால் ஸ்டீல் வூல் எரியவில்லை என்பதே உண்மை. இந்த வீடியோவை கிராபிகஸ் மூலம் உருவாக்கி உள்ளார்கள்.  வீடியோ எடிட்டிங் தொழில்நுட்ப முறையின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த வீடியோவில் செல்போன் ஒலிக்க ஆரம்பித்த உடனேயே ஸ்டீல் வூல் எரியத் துவங்கி விடுகிறது.


இந்த வீடியோ வைரல் ஆனவுடன் பலரும் முயற்சி செய்து பார்த்துள்ளார்கள் 
வைரல் வீடியோவில் காண்பிக்கப்பட்டு போன்றே ஸ்டீல் வூல் பொருளை சுருட்டி வைத்து அதன் நடுவே செல்போனை வைத்துள்ளனர். இறுதியாக, அந்த செல்போன் எண்ணிற்கு அழைத்தால் ஸ்டீல் வூல் எரியாமல் இருப்பதை பார்க்க முடிகிறது.


அட்மின் மீடியா ஆதாரம்


https://www.youtube.com/watch?v=K5zSk3-6RJA&feature=emb_title


https://www.youtube.com/watch?v=ynM4w0L6Lpg


https://www.youtube.com/watch?v=jNa7zFBw3cs


 எனவே பொய்யான செய்திகளை மக்களுக்கு ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Share this