Breaking News

உள்ளாட்சி தேர்தல்; வேட்புமனு தாக்கல் துவங்கியது

அட்மின் மீடியா
0
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று  துவங்கியது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும்.

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பின் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. 'புதிய மாவட்டங்களில் வார்டு வரையறை செய்யாமல் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்' என தி.மு.க. உச்ச நீதிமன்றம் சென்றது.

இதையடுத்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்த அனுமதி வழங்கியது
 
 
அதன்படி உள்ளாட்சிகளுக்கு டிச. 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இதற்கான மனு தாக்கல் இன்று துவங்கியது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback