Breaking News

வேலூர் காட்டில் அனகொண்டா? - வீடியோவால் பீதியில் மக்கள்!

அட்மின் மீடியா
0
வேலூர் காட்டுப்பகுதியில் அனகொண்டா பாம்பு ஒன்று திரிவதாக வெளியான வீடியோவால் அந்த பகுதி மக்கள் பீதிஅடைந்து.ள்ளனர். 



தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ள நிலையில் வேலூர் அருகே உள்ள மோர்தாணா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழை பெய்யும் காலங்களில் மழை வெள்ளதோடு அணைக்கட்டு பகுதியில் உள்ள காட்டில் மலை பாம்பு ஒன்று வந்துள்ளது

காட்டு பகுதிக்கு சென்ற சிலர் மிகப்பெரும் மலைப்பாம்பு இருப்பதை  கண்ட இளைஞர்கள் சிலர் அதை தனது மொபைலில் படம் பிடித்துள்ளனர். இந்த வீடியோ வேலூர் காட்டில் அனகொண்டா பாம்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

இந்நிலையில் இதுகுறித்து  வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளார்கள்

 “அது அனகொண்டா வகை பாம்பு இல்லை. அது பெரிய மலைப்பாம்பு” என்று கூறியுள்ளனர். மேலும் மக்கள் யாரும் அந்த காட்டுக்குள் தனியாக செல்ல வேண்டாம் எனவும் வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. அனகொண்டா வகை பாம்புகள் தென் அமெரிக்காவின் மத்திய காட்டுப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் மிகப்பெரும் பாம்பு வகைகள் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா  மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback