வாருங்கள் அரசியலின் தலைமுறையை மாற்றலாம்
அட்மின் மீடியா
0
உள்ளாட்சி தேர்தல் வருமா வராதா என்ற கேள்விக்கு ஒரு வழியாக விடை கிடைத்து
விட்டது உள்ளாட்சி தேர்தல்2019 டிசம்பர் 27 மற்றும் 30ல் இரண்டு கட்டங்களாக
நடத்தப்படும் என அறிவிப்புகள் வந்துள்ளன.
உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழகமெங்கும் கட்சிகள் யாரை தேர்தலில் நிறுத்துவது என்று தேர்வாளர்களை தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடந்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வாக்காளர்கள் யாரை தேர்வு செய்ய வேண்டும் யாரை தேர்வு செய்யக்கூடாது என்பதை பற்றியும் அறிந்துக் கொள்ள சின்னதொரு அலசலை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
வாக்காளர் ஆகிய நமக்கு வாக்களிக்கும் நேரம் மாத்திரமே தன்னுடைய அதிகாரத்தை பிரயோகிக்கும் ”கோல்டன் ஹவர்ஸ்” என்னும் பொன்னான நேரம் ஆகும்

அப்படியான நேரத்தையும் ஓட்டுக்கு
பணம், சத்தியம், பரம்பரை, தெரிந்தவர், பிரியாணி வாங்கி தந்தவர் என அற்ப
காரணங்களுக்காக தவற விட்டுவிட்டால் காலம் முழுதும் முதுகெலும்பற்றவர்களாக குனிந்துக் கிடப்பதைத் தவிர வேறு வழி இல்லை மேலும் தற்போது
நடக்கவிருக்கும் தேர்தலால் மாநில, மத்திய ஆட்சியில் மிகப்பெரிய மாற்றம்
ஏதும் வரப்போவதில்லை ஆனாலும் இது முக்கியமான தேர்தல் தான்
நம் பகுதியில் சந்து
பொந்தில் இருக்கும் குடிநீர் பிரச்சனை, தெரு விளக்கு பிரச்சனை, சாலை
அமைத்தல், பேருந்து நிறுத்தம் இப்படி சின்னஞ்சிறிய பிரச்சனைகளுக்கு நம்மால்
எளிதாக அணுக கூடியவர்களைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நாட்டில் எப்போதும் ஜி.எஸ்.டி, நீட், முத்தலாக் தடைச் சட்டம், மாட்டிறைச்சி, சிறு தொழில்கள் முடங்குதல், வெங்காய விலை ஏற்றம், ஐந்தாம் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, நித்தியானந்தா, ரஜினி அரசியல் என்பன மாத்திரம் பிரச்சனைகள் கிடையாது.

தமிழக
வரைபடத்தில் புள்ளியை விட சிறியதாக இருக்கும் நம் கிராமத்தில் தண்ணீர்
பற்றாக்குறையால் ஏற்படும் உயிர் இழப்புகள், பேருந்து வசதி இல்லாமல்
இழக்கப்படும் கல்வி, சரிவர இயக்கப்படாத மருத்துவமனைகளில் கொல்லப்படும்
உயிர்கள் என ஒவ்வொரு பிரச்சனையும் கவனப்பட வேண்டியது தான்
அப்படியான பிரச்சனைகளுக்கு நாம் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் தெரியுமா?
- திடீரென்று முளைக்கும் பணக்கார வீட்டு தேர்வாளர்களையா?
- இல்லை பாரம்பரிய வீட்டு வாரிசுகளையா?
- இல்லை. அதிக பணம் கொடுத்து ஏலத்தில் சீட்டு வாங்கும் அறிவாளிகளையா?
- இல்லை. தேர்தல் அறிவிப்பை அனுமானித்து வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சட்டென்று பொதுச் சேவைக்குள் குதிக்கும் திடீர் போராளிகளையா?
- இல்லை. ஆளும் கட்சியின் பிரதி நிதிகளிகளையா?
- இல்லை. எதிர்கட்சியா?
இப்படியான தவறான தேர்வாளர்களை தேர்வு செய்வீர்களாயின் காலம் முழுக்க நம் முட்டாள்தனத்துக்கு நம்மையே விலையாகக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.
மக்களே சிந்தியுங்கள் கடந்த ஊராட்சி தேர்தலுக்குப் பின்னான இயற்கை பேரிடர்கள், பொதுப் பிரச்சனைகள், ஊர் சார்ந்த நலத்திட்டங்களில் எந்த ஆதாயமும் எதிர்பார்க்காமல் இரவு பகலாக நமக்காக உழைத்த தன்னலம் பாராட்டாத எவரேனும் கூட்டத்துக்குள் அமுங்கிக் கிடக்கலாம் அவரை தோள் கொடுத்து தூக்கிக் கொண்டுவந்து தேர்தல் களத்தில் அமர வையுங்கள்.
எந்த பிரதிபலனும் இல்லாமல் சமூக சேவை செய்து உங்கள் பகுதியில் தான் உண்டு தன் சேவை உண்டு என்று இருப்பார்கள். அவர்களை ஆதரியுங்கள்
தங்கள் பகுதியில் பல சமூக மாற்றங்களுக்கு வித்திட்ட நீங்கள் அரசியலை கண்டு ஒதுங்குவது ஏன் என்று அவர்களை கேள்வி கேளுங்கள்
பலர் தேர்தல் நேரங்களில் வாக்களிக்காமல் இருந்துவிட்டு, பின்னர் ஆட்சியாளர்களை
குறை கூறுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆட்சியாளர்கள் தவறான பாதைக்கு செல்ல காரணமே, வாக்காளர்கள் சரியான முறையில் வாக்குகளைப் பதிவு செய்யாததும், வாக்குப் பதிவை தவிர்ப்பதுமே ஆகும்.
ஆட்சியாளர்கள் தவறான பாதைக்கு செல்ல காரணமே, வாக்காளர்கள் சரியான முறையில் வாக்குகளைப் பதிவு செய்யாததும், வாக்குப் பதிவை தவிர்ப்பதுமே ஆகும்.
அதுபோல் சமூக மாற்றம் பெறவேண்டும் எண்ணும் நீங்கள் தேர்தலுக்கு வராமல் இருப்பது ஏன்என அவர்களை சிந்திக்க வையுங்கள்
தமிழகத்தின் பெரும் எழுச்சி எல்லாம் மாணவர்களால், இளைஞர்களால் சமூக சேவை செய்யும் உங்களால் உண்டானது. இந்தி எதிர்ப்பு போராட்டம் ஆகட்டும், ஈழப் போர் நடந்த போதெல்லாம் இங்கு உண்டான எழுச்சி ஆகட்டும், ஜல்லிகட்டு போராட்டம் ஆகட்டும், பெரும்பாலும், எந்த பெரும் அரசியல் கட்சிகளும் முன்னெடுக்காமல், சிறு அமைப்புகளும், மாணவர்களும் தன்னெழுச்சியாக கிளர்ந்து எழுந்து போராடி இருக்கிறார்கள். ஏன் அரசைக் கூட பணிய வைத்திருக்கிறார்கள் என வரலாற்றை கூறுங்கள்

எந்த பிரதிபலனும் இல்லாமல் அவர்கள் செய்த உதவியின் நீட்சி இன்னும் ஆங்காங்கே எட்டிப் பார்த்துக் கொண்டுதானிருக்கும் அதை மனதில் வைத்து அவர்களுக்கு வாய்ப்பை நல்குங்கள்
இந்த
உள்ளாட்சி தேர்தலின் குடுமி என்பது மத்திய மாநில அரசின்
கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்றாலும் களத்தில் பலனளிக்க இருப்பவரும்,
பலன் பெற போவரும் ஒரே இடத்தில் இருப்பது நன்மை பயக்கும் அதிகாரம் என்பது
அனைவரும் அறிந்ததே. ஆகவே உங்களுடன் காலம் காலமாக பயணித்துக் கொண்டிருக்கும்
சக போராளியை அடையாளும் காணும் நேரம் இதுதான்.
இதற்கு தீர்வு ஒன்றே சமூக
பணியில் ஆர்வம் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தல்களில் வேட்பாளராக வேண்டும்.
வெற்றி பெற்று சமூகத்திற்க்கு மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அதற்கான
வேலையை இன்றே ஆரம்பிப்போம்
சும்மாவே
செயலாற்றும் தன்னலமற்றவருக்கு பதவியும், அரசாங்கத்தின் பணஉதவியும்
கிடைத்தால் அவரைச் சுற்றியுள்ள பொதுச்சமூகம் பயனடையும் என்பதே இந்த பதிவின்
நோக்கம்.
அட்மின் மீடியாவிற்காக எழுத்தாளர் சாரா - சென்னைTags: முக்கிய செய்தி