வெளிநாட்டு வேலைக்கு செல்ல மத்திய அரசிடம் பதிவு செய்யனுமா ? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
ஜனவரியில் இருந்து கட்டாய நடைமுறை மத்திய அரசிடம் பதிவு செய்யாவிட்டால் வெளிநாட்டு வேலைக்கு போக முடியாது என்று ஒரு செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இருக்கின்றார்கள்
அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அரபு நாடுகள் உட்பட 18 நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்கள், மத்திய அரசின் குடியேற்ற இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் வெளிநாடு செல்ல முடியாது என 14 நவம்பர் 2018 அன்று இந்திய வெளி விவகார அமைச்சம் உத்தவு பிறப்பித்தது
இந்த செய்தி 14 நவம்பர் 2018 ற்க்கு பிறகு அனைத்து செய்தி தாள்களிலும் வந்தது உண்மை
ஆனால் அனைத்து தரப்பிலும் ஆட்சேபனை தெரிவித்ததால் 28 நவம்பர் 2018 புதன்கிழமை அன்று வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட திருத்தப்பட்ட ஆலோசனையை ட்வீட் செய்த அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம்,
இந்தியர்கள் (என்.ஆர்.ஐ) எழுப்பியுள்ள கவலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது
18 நாடுகளில் வேலை விசாக்களுடன் ஈசிஎன்ஆர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் கட்டாய ஆன்லைன் பதிவை தற்காலிகமாக நிறுத்த இந்திய அரசு முடிவு செய்தது
இருப்பினும், தானாக முன்வந்து பதிவு செய்ய விரும்பும் அனைத்து இந்தியர்களும் அவ்வாறு செய்யலாம் என்று இன்றளவும் உள்ளது.
இந்த பழைய செய்தியை எடுத்து உண்மையை போல் புதிய செய்தியாக இன்று பொய்யாக பரப்பிக்கொண்டு உள்ளனர்
அட்மின் மீடியா ஆதாரம்
இந்திய வெளிவிவகார அமைச்சகம்
அரபு நாளிதழில் வந்ததற்க்கான ஆதாரம்
தமிழ் நாளிதழில் வந்ததற்கான ஆதாரம்
Tags: மறுப்பு செய்தி
