Breaking News

யாரும் நம்பாதீர்கள் ! ஈரோட்டில் கேன்சர் கோழிகள் என்று வதந்தி? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
இன்று ஈரோடு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தபோது கோழிகளுக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்தார்கள் சுமார் 2 லட்சம் கோழிகள் அளிக்கப்பட்டன


என்று ஒரு  செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இருக்கின்றார்கள் 

உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அப்படியானால் உண்மை என்ன?

இந்த செய்தியில் வரும் கோழிகள் இறந்து மலை போல உள்ள போட்டோவை  நாம் மறுக்க வில்லை,  ஆனால் அதை வைத்து  2015 வருடம் முதல் உலகின் பல இடங்களில் பொய்யாக பரவி வருகின்றனர்.

இந்த போட்டோ எங்கு முதலில் எடுத்தார்கள் என தெரிய வில்லை.

ஆனால் இந்த செய்தியின் போட்டோ  2015 ஆண்டு ஹைதராபாத்தில் கோழிகள் இறந்து கிடக்கின்றன  என்றும்

2017 ஆண்டு  மலேசியா கிளந்தன் பகுதி உள்ள இறந்து கிடக்கும் கோழிகள் எனவும்

தற்போது 2019 ம ஆண்டு ஈரோடு எனவும்  இந்த போட்டோ பரவி வருகின்றது

பொதுவாக பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு சில சமயங்களில் நோய்கள் ஏற்பட்டு இறப்பது என்பது உள்ளதுதான் அந்த போட்டோக்களை வைத்து மிகைப்படுத்தி மக்களை அச்சுறுத்தும் வகையில் செய்தியாக வெளியிடுவதுதான் நாம் தவறு என்கிறோம்.

அட்மீன் மீடியா இது சம்மந்தமான ஒரு பதிவும் ஏற்கனவே பதிவிட்டு உள்ளோம் 


அட்மின் மீடியா ஆதாரம் 



Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback