Breaking News

நாளை முதல் செல்போன் கட்டணங்கள் பலமடங்கு உயர்வு: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

அட்மின் மீடியா
0

ஏர்டெல் செல்போன் கட்டணங்கள் நாளை முதல் உயர்வு -
ஏர்டெல், வோடபோன், ஜியோ ஆகிய செல்போன் கட்டணங்கள் நாளை முதல் 40 சதவீதம் உயர்த்தப்படுகின்றன.

அன்லிமிட்டட் இலவச அழைப்புகளில் ஏர்டெல் மற்றும் வோடோபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மாதக் கட்டணம் வசூலித்து வருகின்றன. 

இலவச அழைப்புக்கான அளவு நிர்ணயத்தை தாண்டி பேசுபவர்கள் இனி நிமிடத்திற்கு 6 பைசாவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். 

வோடோபோன் ஐடியா 28 நாட்களுக்கு அன்லிமிட்டட் கால்களுக்கு179 ரூபாய்க்கு சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அது 299 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

ஏர்டெல் நிறுவனமும் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கான  28 நாட்களுக்கு இதுவரை 129 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இனி அது 148 ரூபாயாக உயர்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களின் ஆல் இன் ஒன் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதில் இதர செல்போன்களுடன் தொடர்பு கொள்வதற்கான தற்போதைய கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. டிசம்பர் 5ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

ஒரே நெட்வொர்க்கில் குரல் அழைப்பு மூலம் பேசும் வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்புகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback