நீ ஆபாச படம் பார்ப்பவன் தானே ? போலிஸ் மிரட்டல் உண்மையா
அட்மின் மீடியா
0
ஆபாச படம் பார்த்தியா என காவல்துறையை சேர்ந்தவர்கள் எனக்கூறி மிரட்டல் போன் கால்கள் என ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகின்றது
அந்த செய்தி உண்மையா என் அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மை தன்மைபற்றி அட்மின் மீடியா களம் கண்டது
இளைஞர்களின் தொலைபேசி எண்ணிற்கு மதுரை காவல் துறையிலிருந்து பேசுவதாக அழைப்பு வந்ததுள்ளது. அத்துடன் ஆபாசம் படம் பார்த்ததற்கு ரூ.5000 அபராதம் கட்ட வேண்டும் என்றும், இல்லையென்றால் உங்கள் வீட்டிற்கு இரண்டு நாட்களில் காவல்துறையினர் வர கூடும் என்றும் மிரட்டியுள்ளனர். மேலும் பெற்றோரிடமும், கல்லூரி நிர்வாகத்திடமும் புகார் தெரியப்படுத்துவோம் என அந்த ஆடியோவில் உள்ளது
அந்த செய்தி உண்மையில்லை
யாரும் நம்பவேண்டாம்
காவல்துறையில் இருந்து யாரும் அதுபோல் போன் செய்து பேசவில்லை
யாரோ வேண்டும் என்றே விளையாட்டாய் அது போல் பேசியுள்ளார்கள் சிலர் கேலிக்கு மிரட்டினால் கூட இதயம் பலகீனமானவர்கள் மிரட்டலுக்கு அஞ்சி தவறான முடிவை தேடிக் கொள்ளும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது எனவே எச்சரிகையாக இருங்கள்
Tags: மறுப்பு செய்தி
