பெண்களை பாதுகாப்பாக வீட்டில் இறக்கி விடும் போலீஸ் சேவை எண். உண்மையா?
அட்மின் மீடியா
0
பெண்களை பாதுகாப்பாக வீட்டில் இறக்கி விடும் போலீஸ் சேவை எண்.இரவு 10-6 மணியளவில் தனியாக மற்றும் வீட்டிற்கு செல்ல வாகனம் இல்லாமல் இருக்கும் பெண்கள் போலீஸ் அவசர உதவி எண் (1091 மற்றும் 7837018555)-க்கு அழைத்து வாகனத் தேவை குறித்து தெரிவிக்கலாம். இந்த சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த செய்தியை முடிந்தவரை பகிருங்கள்.
என்ற ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது
இந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
ஆம்......உண்மை தான்.....ஆனால்பஞ்சாப் மாநிலத்தில் .....
இரவில் வாகன வசதி இல்லாமல் தனியாக தவிக்கும் பெண்களின் பாதுகாப்பிற்கு ” பெண்களுக்கான இலவச பயண திட்டம் ” பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரத்தில் தொடங்கப்பட்டு உள்ளது.போலீஸ் தரப்பில் பெண்களை வாகனத்தில் அழைத்து சென்று பாதுகாப்பாக இறக்கி விடும் சேவையை செயல்படுத்தி வருகின்றனர்.
ஆனால் பலரும் இந்த சேவை நாடுமுழுவதும் என்று தவறாக புரிந்து கொண்டு ஷேர் செய்து வருகின்றார்கள்.
ஆனால் நாடுமுழுவதும் இச்சேவை வந்தால் நன்றாக இருக்கும் என்பது அட்மின் மீடியாவின் கருத்து.
மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!
Tags: மறுப்பு செய்தி
