Breaking News

குர்ஆனை எரித்த ஒருவர் அல்லாஹ்வால் தண்டிக்கப்பட்டார்! என்ற செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
0
குர்ஆனை எரித்த ஒருவர் அல்லாஹ்வால் தண்டிக்கப்பட்டார் என்ற கூற்றுடன்  படங்கள் பகிரப்படுகின்றன. கூற்றுப்படி, ஒரு தனி சம்பவத்தில் மனிதனின் கை எரிக்கப்பட்டது, இது அல்லாஹ்வின் இழிவான செயலுக்கு பதிலடி. 


சமூக வலைதளங்களில் இரண்டு படங்கள் அதாவது கையில் ஒருவர் குர்ஆனை எரித்து கொண்டிருப்பதையும் மற்றொரு படம் அதனால் அவரது கைகள் கருகி விட்டது எனவும் சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்


அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அப்படியானால் உண்மை என்ன?

முதல் போட்டோ

கடந்த சில தினங்களுக்கு முன்பு  நோர்வேயில் உள்ள  கிறிஸ்டியன்சண்ட் என்ற நகரத்தில் முஸ்லீம்களின் புனித குர் ஆனை  எரிப்பதற்கு எதிரான போலிஸின்  உத்தரவை மீறி  Stop Islamisation of Norway (SIAN)
(சியான்) என்கின்ற இயக்கத்தின்  குழுத் தலைவர் லார்ஸ் தோர்சனை  பொது மக்கள் முன்னிலையில் குர் ஆன் பிரதியை தீயிட்டு எரிக்கும் போது அதை தடுக்க   இல்யாஸ் என்பவர் ஒடி சென்று உதைக்கும் காட்சிகளை வீடியோவில் பார்த்து இருப்பிர்கள் 

ரஷ்ய அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனமான ரஷ்யா டுடே நவம்பர் 19, 2019 அன்று அந்த செய்தியிணை ஒளிபரப்பியது.

இந்த சம்பவத்தில் தீயிட்டு கொழுத்திய அந்த நபரின்  போட்டோவை  எடுத்து மற்றொரு போட்டோவான  மருத்துவ மனையில் படுத்து இருக்கும் நபரின்  கைகள் கருகிய நிலையில் உள்ள  போட்டே உடன் சம்மந்தப்படுத்தி  பொய்யாக பரப்பப்பட்டுள்ளது

அப்படியானால் உண்மை என்ன?

படம் 2

இரண்டாவது படத்தில் உள்ளவர்

அமெரிக்காவின் ஓரிகானில் வசிக்கும் பால் கெயிலார்ட், 

ஒரு நாள் கெய்லார்ட்  தான் வளர்க்கும் சார்லி என்கின்ற பூனை மூச்சுத்திணறி வருவதைப் பார்த்து அதன் வாயில் எலி சிக்கி இருப்பதை கண்டு அதை வெளியே எடுக்க முயன்றார் அதனால் பூனை கடிதத்தில் இந்த நோய் ஏற்பட்டதாக கூறப்படுகிறது

கெய்லார்ட் ஜூன் 2012 இல் பிளேக் நோயால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், 

ஜூலை 2012 அறிக்கை கூறியது. பூனைக்கு பிளேக் இருப்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.

செப்டம்பர் 19, 2012 அன்று இங்கிலாந்தின் டெய்லி மெயில் வெளியிட்ட ஒரு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.





முடிவில், நோர்வேயில் குர்ஆனை எரித்த லார்ஸ் தோர்சன் அல்லாஹ்வால் தண்டிக்கப்பட்டார் மற்றும் அதன் விளைவாக அவரது கைகள் எரிக்கப்பட்டன என்று பொய்யாகக் கூற, 

புபோனிக் பிளேக்கால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியின் பழைய மற்றும் தொடர்பில்லாத போட்டோவை சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. .

மார்கத்தின் பெயரில் பொய் செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியா ஆதாரம்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback