Breaking News

மும்பையில் ஜும்ஆ தொழுகை இடையூறின்றி தொடர போலிஸ் பாதுகாப்பு அளித்தார்களா ? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
மும்பை: இனி ரோடுகளில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை இடையூறின்றி தொடரும் பிஜேபி குண்டர்கள் இடையூறு அளித்தால் சேனா தொண்டர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள்/ சிவசேனா சபாஷ் இறைவன் பெரும் சூழ்ச்சியாளன்
Maharashtra Shiv sena first step... Police were seen handing over Tasbeeh and said Jumma Mubarak to all Muslims who came to attend Friday  prayers..👇🏽



என்று ஒரு  செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு வருகின்றார்கள் 


அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது





அப்படியானால் உண்மை என்ன?

இந்தியாவில் "வகுப்புவாத நல்லிணக்க ஒருங்கிணைப்பு வாரம்   என்று " உள்துறை அமைச்கத்தால்  ஒரு  ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை நடத்தப்படும்

அது போல் சமூக ஒருங்கிணைப்பு நிகழ்வான தேசிய ஒருங்கிணைப்பு வாரத்தின் ஒரு பகுதியாக மஹாராஷ்டிராவில் தானே பகுதியில் உள்ள  மும்ப்ரா என்கின்ற இடத்தில் இருக்கும் கவுஸா பள்ளிவாசல் வெளியே அந்த பகுதி   காவல் துறையை  சேர்ந்த  காவலர்களால்  தஸ்பீ என்கின்ற  பிரார்த்தனை மணிகளை விநியோகிக்கும்  இந்த காட்சியை  எடுத்து சமூக ஊடகங்களில் தவறான கூற்றுக்களுடன் வைரலாகிவிட்டன. 

இந்த வீடியோவை எடுத்து மகாராஷ்டிராவில் புதிதாக அமைக்கப்பட்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்.சி.பி) மற்றும் காங்கிரசுடன் இணைந்து உத்தவ் தாக்கரே , ஆட்சி அமைத்த பிறகு  மதச்சார்பின்மை வெளிப்படுத்தும் விதமாக முஸ்லிம் மக்களுக்கு பள்ளியின் முன்பாக காவல் துறையினர் தஸ்பி மணி கொடுத்தாதாகவும் ஒரு பொய்யான செய்தியை பரப்புகின்றனர்

இரண்டு வெவ்வேறு சம்பவங்களை அதாவது நவம்பர் 29, 2019 அன்று  வெள்ளிக்கிழமை பிரார்த்தனையும் உத்தவ் தாக்கரே பதவியேற் பிறகு  அதன் காரணமாக மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக என்று  ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒருங்கிணைப்பு தினமாக  நவம்பர் 19 முதல் 25 வரை நடத்தபடும் நிகழ்ச்சிகளையும் ஒன்றாக இணைத்து பொய்யாக பரப்பப்படுகின்றது 

அட்மீன் மீடியா ஆதாரம் 

பத்திரிகை தகவல் பணியகம் இந்திய அரசு
உள்துறை அமைச்சகத்தின்

தேசிய ஒருங்கிணைப்பு வாரத்தில் PIB அறிவிப்பு

https://pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1553067

எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback