Breaking News

இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமைகளை இந்திய அரசு மதிக்கவேண்டும்: அமெரிக்கா அறிக்கை

அட்மின் மீடியா
0

இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமைகளை இந்திய அரசு மதிக்க வேண்டும்.. அமெரிக்க அரசு அதிரடி அறிக்கை!

இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினர் உரிமைகளை அரசு மதித்து நடக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு அறிக்கை வெளியிடுள்ளது.

குடியுரிமை சட்ட திருத்தம் கடந்த வாரம் இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுக்க பலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்தியாவின் பல மாநிலங்களில்  போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

இந்த போராட்டங்கள் குறித்து அமெரிக்க அரசு தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.இதில் ஏற்படும் மாற்றம் கூர்மையாக கவனித்து வருகிறோம்.மக்களின் அமைதியான போராட்டங்களுக்கு அரசு அனுமதி தர வேண்டும். மக்கள் அமைதியாக ஒன்று கூடுவதற்கு உரிமை உள்ளது.
ஆனால் மக்கள் யாரும் கலவரத்தில் ஈடுபட கூடாது. கலவரம் செய்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். மக்களின் மத சுதந்திரத்தை அரசு மதித்து நடக்க வேண்டும். அரசு சட்டத்திற்கு உட்பட்டே நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினர் உரிமைகளை அரசு காக்க வேண்டும் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அவர்களின் உரிமையை காக்க வேண்டும். இந்தியாவின் ஜனநாயக தன்மை காக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. 

இதனால் தற்போது உலக நாடுகள் எல்லாம் இந்தியாவின் பக்கம் தனது பார்வையை திருப்பி உள்ளது.

Give Us Your Feedback