ஆபாச படம் பார்ப்பவர்களின் பட்டியலை சிபிஐ வெளியிட்டதா ? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
ஆபாச படம் பார்ப்பவர்களின் பட்டியலை சிபிஐ வெளியிட்டதாக ஒரு பட்டியல் சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அப்படியானால் உண்மை என்ன?
உலக அளவில் குழந்தைகள் தொடர்பான
ஆபாச படங்களை பார்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு, இந்திய அரசுக்கு தகவல் தர, அங்கிருந்து
மத்திய உள்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக போலீசாருக்கு
அறிவுறுத்தியுள்ளனர்.
இதன்பேரில், ஆபாச படம் பார்ப்பவர்கள், அதுபற்றிய இணையதளம் நடத்துபவர்களின் பட்டியலை தயாரிக்கும் பணியில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது.
இதனால் ஆபாச படங்களை பார்த்தாலே போலீசார் கைது செய்துவிடுவார்கள் என்று கூறி சமூக ஊடகங்களில் பலர் தகவல் பகிர தொடங்கியுள்ளனர். இதற்கேற்ப, செய்தி ஊடகங்களும் அரைகுறையான தலைப்புகளுடன் செய்திகளை பகிர, பொதுமக்கள் குழப்பத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். இத்தகைய சூழலில்தான் சமுக வளைதளத்தில் ஆபாச படம் பார்த்தவரின் விவரத்தை சிபிஐ வெளியிட்டது என்று பொய்யான ஒரு பட்டியலை பலரும் ஷேர் செய்யதுவங்கிவிட்டார்கள்
சிபிஐ இது போல் எந்த ஒரு பட்டியலும் வெளியிட வில்லை ஆனாலும் இதனை உண்மை என நம்பி பலரும் பரப்பிவருகின்றனர்
இதில் இருப்பது உண்மையான சிபிஐ வெளியிட்ட பட்டியல் கிடையாது,
சிபிஐ என்ற வார்த்தை கூட எழுத்துப் பிழையுடன் இந்த பதிவில் இடம்பெற்றுள்ளது‘ Central Bureau Investigation ” என்பதற்கு பதிலாக ” Central Bureau Investication ” என எழுத்து பிழையுடன் ஓர் பட்டியலை தயார் செய்து இருக்கிறார்கள்.
இதுதவிர இந்த பெயர் பட்டியலில் இடம்பெற்ற அனைவரும் காலேஜ் மாணவர்களாக உள்ளனர்.
வேறு எதோ பெயர்ப்பட்டியலை எடுத்து, இப்படி தவறான தகவலை சித்தரித்து பகிர்ந்துள்ளதாக தெரியவருகிறது.
சிபிஐ இப்படி பெயர்ப் பட்டியல் வெளியிட்டதாக நமக்கு எந்த அதிகாரப்பூர்வ செய்தியும் கிடைக்கப் பெறவில்லை.
யாரோ சிபிஐ பெயரை பயன்படுத்தி வேடிக்கையாக தகவல் பகிர, அதனை பலர் உண்மை என நம்பி பொய்யாக பரப்பிக்கிண்டு இருகின்றனர்.
சிபிஐ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூட இப்படி எந்த செய்தி அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
அது மட்டுமின்றி, ஆன்லைனில் குழந்தைகள் தொடர்பான பாலியல் குற்றங்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக பிரத்யேக குழு ஒன்றையும் சிபிஐ கடந்த நவம்பர் மாதத்தில் ஏற்படுத்தியுள்ளது.
அதுபற்றி விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
அட்மின் மீடியா ஆதாரம்
எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி

