9 வயது குழந்தையை மிரட்டும் வளர்ப்புதாய் ? தமிழகத்தில் நடந்ததா? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
தாங்களுக்கு தெரிந்த அனைத்து குழுமத்திற்க்கும் 24 மணி நேரத்திற்குள் இந்த வீடியோவை அனுப்பி அந்த குழந்தையை அந்த தாயிடம் இருந்து காப்பாற்றிவிடலாம் என்று குழந்தையை பேனாவை வைத்து ஒரு தாய் மிரட்டும் வீடியோ காட்சியுடன் இப்படி ஒரு ஆடியோவை பேசி
ஒரு செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இருக்கின்றார்கள்
உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது.
இது உண்மைதான் ஆனால் மலேசியாவில் நடந்தது
வளர்ப்பு மகளை கொடுமை செய்ததற்காக அந்த பெண் கைது செய்யப்பட்டார்
வீடியோவில் குழந்தையை திட்டும்போது, பேனாவை வைத்து மிரட்டுவது போல் உள்ளது
மலேசியா கோலாலம்பூர் ஜின்ஜாங்கில் உள்ள ஸ்ரீ அமன் மக்கள் வீட்டுவசதி திட்டத்தில் (பிபிஆர்) ஒரு குடியிருப்பில் தனது ஒன்பது வயது வளர்ப்பு மகளை மிரட்டும் அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
உண்மை இப்படி இருக்க பலரும் தமிழகத்தில் நடந்தது என்று பொய்யான கட்டுகதைகளுடன் பரப்பி வருகின்றார்கள்
அட்மின் மீடியா ஆதாரம்
Tags: மறுப்பு செய்தி