Breaking News

உலகின் 8 வது அதிசயம் காரகோரம் ஹைவே உண்மையா?

அட்மின் மீடியா
0
உலகத்தின் 8-வது அதிசயமாக கருதப்படும், எஞ்சினீரிங்க் மார்வெல் – காரகோரம் ஹைவே ….

கீழே இருக்கும் வீடியோவை காண்பதற்கு முன்னால்,இதைப்பற்றிய பிரமிக்க வைக்கும் சில விவரங்கள்….


பாகிஸ்தானிலிருந்து – சீனாவிற்கு செல்லும், 1300 கிலோமீட்டர் தூர மலைப்பாதை “காரகோரம் ஹைவே” ( Karakoram Highway )… இந்த பெருஞ்சாலை பால்டிஸ்தானில் உள்ள கில்கிட்டை (gilgit -ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள ஒரு பகுதி )பண்டைக்கால சில்க் ரோடுடன் இணைக்கிறது.

இதில் 806 கி.மீ. பாகிஸ்தான் எல்லைக்குள்ளும், மீதி தூரம் சீன எல்லைக்குள்ளும் அமைந்திருக்கிறது…. இந்தப்பாதையை அமைக்க 20 ஆண்டுகள் பிடித்திருக்கிறது. பாகிஸ்தானுக்கும், சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி, இதன் பெரும்பாலான செலவு, சீனாவால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த பாதையை உருவாக்கும் பணியில் – நிலச்சரிவுகளாலும், மலையிலிருந்துசறுக்கி விழ நேர்ந்ததாலும், பணியில் இருக்கும்போதே – 810 பாகிஸ்தானியர்களும், 200 சீனர்களும் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள்.

காரகோரம் மலைச்சிகரங்களை கடக்கும்போது, இந்த பாதை சுமார் 15,466 அடி அதாவது 4,714 மீட்டர் உயரத்தில் செல்கிறது….

உலகத்தின் 26,000 அடி (எட்டாயிரம் மீட்டர்) உயரத்தில் அமைந்திருக்கும் 5 சிகரங்களை இந்தப்பாதையில் பயணிக்கும்போது பார்க்க முடியும்…. இதிலிருந்து நெருங்க முடியும்… உலகத்தின் மிக அதிசயமான, ஆபத்தான
பாதையில் பயணம் …!!!

மீண்டும் ஒரு முறை பாருங்கள். அப்போது தான் அதன் அருமையை உணர முடியும் பலமுறை பார்த்தும்  பிரமிப்பு அடங்கவில்லை… எப்படித்தான் திட்டம் போட்டு, எப்படித்தான் கட்டினார்களோ…? அதுவும் அவ்வளவு உயரத்தில், செங்குத்தான சிகரங்களில்….!!!

என்று ஒரு  செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இறுக்கின்றார்கள் 

உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அப்படியானால் உண்மை என்ன?

இந்த செய்திக்கும் அதனுடன் வரும் வீடியோயும் வெவ்வேறு செய்திகள்  இரண்டையும் ஒன்றாக இணைத்து பொய்யாக பரப்பப்படுகின்றது

அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானம் 2007 ஆம் ஆண்டில் சீனா அரசால் தொடங்கி இது 2012 ஆம் ஆண்டில் பொது பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு கிட்டத்தட்ட 20.6 பில்லியன் யுவான் (3 3.3 பில்லியன்) செலவு ஆனது

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் யான் மற்றும் ஜிச்சாங்கை இணைக்கும் 270 பள்ளத்தாக்கின் குறுக்காக அமைக்கப்படும் நீண்ட உயரமான சாலை/இருப்புப்பாதைப் பாலம் மற்றும் 25 சுரங்கப்பாதைகள் கொண்ட 240 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலை யாக்சி நெடுஞ்சாலைக்கு சொந்தமானது தான்  இந்த வீடியோ.


இதன் முதல் பகுதி 2012 ஆம் ஆண்டில் வாகன ஓட்டிகளுக்காக திறந்து விடப்பட்டது.

உலகின் மிக உயர்ந்த நெடுஞ்சாலை எனக் கூறப்படும் இது RMB20 பில்லியனுக்கும் (S $ 4.14 பில்லியன்) செலவில் ஐந்து வருடங்கள் கட்ட ஆனது. 

சிச்சுவான் மாகாணத்தில் கண்கவர் வானம் தொடும்  காட்சியாக பாம்பு போல் வலைந்து செல்வதால்  இது பொதுமக்களுக்காக திறக்கப்பட்டதிலிருந்து, ஒரு முக்கிய சுற்றுலா அம்சமாக மாறியது.

பாகிஸ்தானுடன் இணைக்கும் 880 கி.மீ நெடுஞ்சாலையை சீனா திறக்கவில்லை.

உண்மையில் சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏதேனும் நேரடி நெடுஞ்சாலை இருக்கிறதா என்று பார்த்ததில் விக்கிபீடியாவைப் பொறுத்தவரை, 1300 கி.மீ நீளமுள்ள காரகோரம் நெடுஞ்சாலை உள்ளது, இது சீனா-பாகிஸ்தான் நட்பு நெடுஞ்சாலை என்றும் அழைக்கப்படுகிறது. 

இது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஹசன் அப்தால் முதல் பாகிஸ்தானில் உள்ள குஞ்செராப் பாஸ் வரை நீண்டுள்ளது, இது காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தானை ஆக்கிரமித்தது, அங்கு அது சீனாவைக் கடந்து சீனா தேசிய நெடுஞ்சாலை 314 ஆகிறது.

அட்மின் மீடியா ஆதாரம்


இந்த நெடுஞ்சாலை 1979 இல் கட்டி முடிக்கப்பட்டு 1986 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. நெடுஞ்சாலையின் சுமார் 887 கி.மீ நீளமுள்ள பகுதி பாகிஸ்தானிலும், மீதமுள்ள 413 கி.மீ சீனாவில் உள்ளது.

பாகிஸ்தானுக்கும் சீனாவிற்க்கும் இடையே  880 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலை என்ற கூற்று தவறானது

கட்டு மானம் செய்யும் போது முறையான பாது காப்பு அம்சங்களையும் தாண்டி சில விபத்துக்கள் ஏற்படுவது உண்டு ஆனால்  810 பாகிஸ்தானியர்களும், 200 சீனர்களும்  இந்த சாலை அமைக்க தங்கள் உயிரை   கொடுத்து உள்ளார்கள் என்பதற்கு எந்த வித தகவலும் கிடைக்கவில்லை. 


எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback