Breaking News

வாக்காளர் பட்டியல் 23-ந் தேதி வெளியிடப்படும் -தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
வரைவு வாக்காளர் பட்டியல் 23-ந் தேதி வெளியிடப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  2

இதுவரை சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களை கொண்ட ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 23-ந் தேதி வெளியிடப்படும்

இந்த பட்டியலில் பெயர் சேர்க்கவோ, விவரங்களை திருத்தவோ 23-ந் தேதியில் இருந்து ஜனவரி 22-ந் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்படும். இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி பிப்ரவரி 3-ந் தேதி முடிவடையும்.

துணைப்பட்டியல் தயாரிக்கும் பணி பிப்ரவரி 11-ந் தேதி நடக்கும். அதைத் தொடர்ந்து பிப்ரவரி 14-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா  மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!

Tags: முக்கிய செய்தி

Share this