Breaking News

பள்ளி கேன்டீன்களில் நொறுக்குத் தீனிகளை விற்பதற்க்கு தடை ..அதிரடி உத்தரவு

அட்மின் மீடியா
0
பள்ளி கேன்டீன்களில் நொறுக்குத் தீனிகளை விற்பதற்க்கு  உணவு பாதுகாப்புத்துறை நாடு முழுவதுற்க்கும் தடை விதித்துள்ளது.

பள்ளிகளைச் சுற்றி 50 மீட்டர் இடைவெளியில் உள்ள கடைகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் எந்த மாதிரியான உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடுகிறார்கள் அவை தரமானவையா என்பதை ஆய்வு செய்ய பள்ளி நிர்வாகம் தனிக்குழுக்களை அமைத்து கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.


பள்ளி கேன்டீன்களில் நொறுக்குத் தீனி மற்றும் அது தொடர்பான விளம்பர பதாகைகள், சுவர் விளம்பரங்கள் எதுவும் இடம்பெறக் கூடாது என்று கூறப்பட்டு உள்ளது.
தங்களது வளாகத்தில் உள்ள கேன்டீன்களில் என்னென்ன உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பன போன்ற விவரங்களை மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறைக்கு பள்ளி நிர்வாகங்கள் அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

மாணவர்களின் நலனை பேணும் வகையில் அனைத்து பள்ளிகளும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவர்கள் நொறுக்குத்தீனி சாப்பிடுகிறார்களா என பள்ளி நிர்வாகம் சார்பில் தனிக்குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags: முக்கிய செய்தி

Share this