ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்க்க மத்திய அரசு முடிவு
அட்மின் மீடியா
0
ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்பனை செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியாவை முழுமையாக தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியா தொடர் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதால் அதை விற்க அரசு கடந்த சில ஆண்டுகளாகவே முயற்சித்து வருகிறது. தற்போது ஏர் இந்தியா நிறுவனத்திற்க்கு ரூ.60,000 கோடிக்கு மேல் கடன் சுமை உள்ளது என தெரிகின்றது
தற்போதைய விற்பனை முயற்சியில், ஏர் இந்தியாவின் முழுப் பங்குகளும் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதோடு, அதை வாங்குபவர்கள் வேண்டுமென்றால் ‘ஏர் இந்தியா’ என்ற பெயரை மாற்றிக்கொள்ளலாம் எனவும் அரசு சலுகை வழங்கியுள்ளது. டாடா உள்ளிட்ட சில நிறுவனங்கள் ஏர் இந்தியாவை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.
இதற்க்கு முன்பு ஏர் இந்தியாவின் 76 சதவீத பங்குகளை விற்று விட்டு, 24 சதவீத
பங்குகளை மட்டும் தன் வசம் வைத்துக்கொள்ள அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால்
அதற்குப் பெரும்பாலான நிறுவனங்கள் ஒப்புக்கொள்ளாததால், ஏர் இந்தியாவின்
பங்கு விற்பனை நடவடிக்கை தோல்வியடைந்தது என்பது குறிப்பிடதக்கது.
Tags: முக்கிய செய்தி
