Breaking News

கெத்து காட்டும் வோடபோன் ! இந்தியாவை விட்டு செல்ல நாங்கள் யோசிக்கவே இல்லை

அட்மின் மீடியா
0
தற்போது தொலைத் தொடர்பு சேவையில் நஷ்டம் அதிகரித்து வருவதால் வோடபோன் நிறுவனம் வெளியேற உள்ளதாக பலரும் சமூக வலைதளங்களில் ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள்.

அந்த செய்தியினை திட்டவட்டமாக வோடபோன் நிறுவனம் மறுத்துள்ளது




இங்கிலாந்தை தலைமை இடமாக கொண்டு இயங்கும் வோடபோன், இந்தியாவில்  தொலைதொடர்பு  சேவையை வழங்கி வருகிறது.

சமீப காலமாக தொடர் நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. அத்துடன் அந்நிறுவனத்தின் பங்குகளின் விலையும் சரிவை சந்தித்து வருகிறது. 

இதனால் வோடபோன் நிறுவனம் தனது சேவையை நிறுத்தி இந்தியாவில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவல்கள் உண்மையில்லை என வோடபோன் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback