Breaking News

பராக் ஒபாமா சர்வர் வேலை செய்கின்றாரா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
நூறு வயதானலும் பதவி வெறி பிடித்து அலையும் நம்மூர் அரசியல்வாதிகளிடையே பதவியை முடித்து விட்ட ஒபாமா 5 நட்சத்திர ஓட்டலில் சர்வராக வேலை செய்யும் காட்சி
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இப்போது ஒரு ஹோட்டலில் வேலை செய்து கொண்டு இருக்கின்றார்

என்று ஒரு  செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இருக்கின்றார்கள் 

உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது

யாரும்  நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

இந்த வீடியோ 2016 ல் எடுக்கப்பட்டது 

அமெரிக்க ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் நபர்கள் தங்கள் பணி ஒய்வு பெறும்போது அவர்களுக்கு  நன்றி தெரிவிக்கும் விதமாக அன்று ஜனாதிபதியாக இருந்த  ஒபாமா அவர்களால்   இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது 

அதில்  கலந்து கொண்ட வீரர்களுக்கு தன் கையால்  உணவு பரிமாறும் இந்த வீடியோவை எடுத்து இங்கு பொய்யாக பரப்பிகொண்டு உள்ளனர்.

இந்த வீடியோ மட்டும் அல்ல இது போல் அவர் உணவு பரிமாறும் அனைந்து போட்டோக்களையும் எடுத்து உலகம் முழுவதும்  பல விதமாக ஒப்பிட்டு  பொய்யாக பரப்பி உள்ளனர்

அட்மின் மீடியா ஆதாரம்

ஓபாமா உணவு பரிமாறும் வீடியோ


அந்த செய்தி பொய் என்பதற்கு ஆதாரம்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback