Breaking News

ஷியா வக்பு வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

அட்மின் மீடியா
0
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் தங்களுக்கு சொந்தம் இல்லை என 1946-ம் ஆண்டு பைசாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஷியா வக்பு வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதி தங்களுக்கு சொந்தம் என்பது ஷியா வக்பு வாரியத்தின் மனு. ஆனால் பாபர் மசூதி இடமான சன்னி வக்பு வாரியத்துக்கு சொந்தம் என 1946-ல் பைசாபாத் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


பின்னர் உச்சநீதிமன்றத்தில் பைசாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஷியா வக்பு வாரியம் மேல்முறையீடு செய்தது. அதில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்துக்கு உரிமை கோரி மனுவை தாக்கல் செய்தது.

இம்மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இன்று தள்ளுபடி செய்தது.

Tags: முக்கிய செய்தி

Share this