ரஷ்ய விமானி இஸ்லாத்தை ஏற்றுகொண்ட சம்பவம் உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
ஒரு ரஷ்ய பயணிகள் விமானம் பர்னோல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது அதில் எல்லா நட்டு பயணிகளும் இருந்தனர், அவர்களில் ஒரு முஸ்லீம் பயணியும் இருந்தார், விமான இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு விமானம் விழத் தொடங்கியது அதிவேகத்தில் தரையை நோக்கி செல்ல ஆரம்பித்து, அவர்களில் சிலர் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் ஒரு பயங்கரமான விபத்தில் சிக்கி கொண்டோம் என மயக்கம் அடைந்தனர், விமானத்தில் இருந்த முஸ்லீம் அல்லாஹ் என்று கூறி இரு கைகளையும் உயர்த்தினார் அல்லாஹ் உன்னை நாங்கள் நம்புகின்றேம் உன் கருணையால் அனைவரையும் காப்பாற்று என்றார்
திடீரென்று என்ஜின்கள் அனைத்தும் வேலை செய்யத் தொடங்கின, பைலட் உடனேவிமானத்தை கட்டுப்படுத்தி தரையிறங்கினார்
விமானம் எவ்வாறு பாதுகாப்பாக இருந்தது என்பதை சரிபார்க்க அவர்கள் விமானத்தின் கருப்பு பெட்டியை பார்த்தனர், அதில் இருந்த முஸ்லிம் பாதுகாக்க இருக்க அல்லாஹ்விடம் தூஆ செய்து கெஞ்சுகிறார் அந்த பேரழிவில் இருந்து அல்லாஹ் சுபனா வா தஅலா முஸ்லிமின் துஆவுக்கு பதிலளித்தார் என்பதில் தான் உறுதியாக இருப்பதாக கேப்டன் கூறினார்.
பைலட் உடனடியாக இஸ்லாத்திற்கு ஏற்றுக்கொண்டார் தயவுசெய்து வீடியோவைப் பாருங்கள் என்ற ஒரு செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இருக்கின்றார்கள்
உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அப்படியானால் உண்மை என்ன?
அதிலுள்ள செய்தியும் வீடியோவும் வெவ்வேறு தருணங்களில் நடந்த செய்தியாகும் அந்த விமானம் பறவை மோதி விபத்துக்குள்ளானது ஒரு செய்தியும்,
ஒரு பைலட் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்பது மற்றொரு செய்தியாகும் இரண்டையும் ஒன்றாக இணைத்து பொய்யாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பைலட் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்பது மற்றொரு செய்தியாகும் இரண்டையும் ஒன்றாக இணைத்து பொய்யாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அதுபோல் இஸ்லாத்தை ஏற்றுகொண்ட விமானி ரஷ்ய நாட்டை சேர்ந்தவர் அல்ல இவர் சவூதி ஏர்லைன்ஸில் பணிபுரியும் இத்தாலியன் விமானி ஆவார் அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது உண்மை
விமான விபத்து நடந்து 2019 ம் வருடம்
விமானி இஸ்லாத்தை ஏற்ற சம்பவம் 2018 ம் ஆண்டு
படைத்த இறைவனால் இது போல் நடக்க வைக்க வல்லமை உடையவன் என்பதில் எந்த விதமான மாற்று கருத்து இல்லை ஆனால் வெவ்வேறு சம்பவங்களை ஒன்றாக இனைத்து இறைவனின் பெயரால் பொய் உரைப்பது தான் தவறு
அட்மின் மிடியா ஆதாரம்
எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி
