Breaking News

ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யாமல் மாடிபிகேசன் செய்யலாமா?

அட்மின் மீடியா
0
இது பலபேருக்கு தெரிய வாய்ப்பில்லை . இப்பொழுது நீங்கள் இரயிலில் பயணம் செய்யவதர்க்காக ரிசர்வேஷன் செய்திருந்து தேதி மாற்றுவதாக இருந்தால் டிக்கட்டை கேன்சல்(cancel) செய்து பிறகு அந்த தேதிக்காக டிக்கட் எடுத்தால் ஒரு நபருக்கு ரூபாய் 120 நஷ்டம் ஆகிறது அதர்குபதிலாக டேட் மாடிபிகேஷன்(date modification) என்று ஒரு வாய்பு உள்ளது .அதை பயன்படுத்தி மாற்று தேதிக்கு டிக்கட் எடுத்து விடலாம் .அதற்கு ரூபாய் 20 மட்டுமே செலுத்த வேண்டும். இதனால் ரூபாய் 100 லாபமாகிறது............. ஷேர் செய்வதால் பலபேருக்கு தெரிய வாய்ப்பு உள்ளது


என்று ஒரு  செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இருக்கின்றார்கள் 

இந்த செய்தி உண்மையா   என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது




அப்படியானால் உண்மை என்ன?


முன்பதிவு டிக்கெட்...

நீங்கள் ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்து ரயில் டிக்கெட் வாங்கியிருந்தால்  அதனை நீங்கள் மேற்கூறியவாறு மாடிபிகேசன் செய்யலாம்  

ஆனால் அதேசமயம் நீங்கள் இனையம் வழியாக IRTC தளத்தில் புக் செய்த டிக்கெட்டை மாடிபிகேசன் செய்யமுடியாது. மேலும்


தட்கல் டிக்கெட்...

உறுதி செய்யப்பட்ட தட்கல் டிக்கெட் எடுத்திருந்து அதை கேன்சல் செய்தால், பணம் எதுவும் திரும்பக் கிடைக்காது. அதே சமயம், அந்தத் தட்கல் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்டிலிருந்து, ரத்து செய்யப்பட்டால், டிக்கெட் கட்டணத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு மீதமுள்ள தொகை திருப்பி அளிக்கப்படும்.

மேலும் தட்கல் டிக்கெட்டை மாடிபிகேசன் செய்யமுடியாது



Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback