Breaking News

பார்க்கிங் செய்த காருக்குள் வேகமாக வளர்ந்த மரம்? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
பிரான்சில் மரம் ஒரே இரவில் காரில் முளைத்தது. அது எப்படி நடந்தது என்று யாருக்கும் தெரியாது.

பார்க்கிங் செய்த காருக்குள் வளர்ந்த மரம்

சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட காரில் துளையிட்டு மரம் வளர்ந்து இருப்பதை கண்டு அங்குள்ள மக்கள் ஆச்சரியப்படும் காட்சிகள், காரின் கீழே மரத்தின் அடிப்பகுதி காண்பிக்கும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. 

என்று ஒரு  செய்தியை பலவகையாக  மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இறுக்கின்றார்கள்

 இந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது......

இல்லை.....இது உண்மை இல்லை.... அது பொய்யான செய்தி .... யாரும் நம்பவேண்டாம்.

அப்படியென்றால் உண்மை என்ன

உண்மையில், காருக்குள் புகுந்து மரம் வளரவில்லை. அப்படி வளர சாத்தியமும் இல்லை.

அந்த சம்பவம்  பிரெஞ்சு நாட்டின் நான்டேஸ் நகரைச் சேர்ந்த Royal de luxe எனும் நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட கலை வேலைபாடு மட்டுமே. 

இந்நிறுவனம், தெருக்களில் மக்கள் ஆச்சரியப்படக்கூடிய வகையில் கலை வடிவமைப்புகளை உருவாக்குபவர்கள்.

2019 நவம்பர் 18-ம் தேதி காரில் புகுந்து மரம் வளர்ந்து இருப்பது போன்ற புகைப்படத்தை Royal de luxe தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருந்தனர்.

அட்மின் மீடியா ஆதாரம்


எனவே பொய்யான விஷயத்தினை யாரும் ஷேர் செய்யாதீர்கள்....

Tags: மறுப்பு செய்தி

Share this