வாட்ஸ் அப் புது வீடியோ வைரஸ் : தற்காத்து கொள்வது எப்படி?
அட்மின் மீடியா
0
வாட்ஸ் அப் நிறுவனம் தற்பொழுது அதன் பயன்பாட்டில் புதிய மால்வேர் வைரஸ் ஒன்றை கண்டுபிடித்துள்ளது.
இதைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் பயனரின் அனைத்து தகவல்களையும் திருட முடியும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
என்ன வைரஸ் அது எப்படி கண்டுபிடிப்பது
தற்பொழுது வாட்ஸ்அப் இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மால்வேர், எம்பி 4 ஃபைல் வடிவத்தில் போனுக்கு அனுப்பப்பட்டுத் தாக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ ஃபைல் மூலம் தாக்குதல் பயனரின் மொபைல் போனிற்கு வரும் வீடியோ ஃபைல்லை ஓபன் செய்ததும், ஹேக்கரின் கட்டுப்பாட்டிற்குள் பயனரின் வாட்ஸ்அப் அக்கௌன்ட் மற்றும் அதில் உள்ள சாட், புகைப்படம் மற்றும் போனில் உள்ள அனைத்து தகவல்களையும் ஹேக்கர்களால் திருட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வைரஸ்ஸில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி?
உங்கள் வாட்ஸப்பில் ஆடியோ, வீடியோ, மற்றும் புகைப்படம் ஆட்டோமேட்டிக் டவுன்லோட் ஆனில் உள்ளதா என்பதை பார்க்கவும் அப்படி ஆனில் இருந்தால் அதை உடனே ஆஃப் செய்து வைத்துக்கொள்ளுங்கள்
உங்களுக்கு தெரியாத எண்ணில் இருந்து ஏதேனும் வீடியோ வந்தால் அந்த வீடியோகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என அட்மின் மீடியா கேட்டுகொள்கின்றது
மேலும் உடனடியாக பிளேஸ்டோர் சென்று உங்கள் வாட்ஸப்பை அப்டேட் செய்து கொள்ளுங்கள்
Tags: எச்சரிக்கை செய்தி

