Breaking News

இன்று தேசிய பத்திரிகையாளர் தினம்

அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் இன்று தேசிய பத்திரிகையாளர் தினம் கொண்டாடப் படுகிறது. 

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு 1966  நவம்பர் 16 ஆம் தேதியில் இருந்து  தேசிய பத்திரிகையாளர் தினமாக கொண்டாடி வருகின்றது
மன்னர் ஆட்சி காலத்தில் தகவல்களை தெரிவிக்க முரசு கொட்டியும், புறாவின் காலிலும், குதிரை வீரர்கள் மூலமாகவும்  மன்னர்களுக்கும் மக்களுக்கு செய்தியாக தெரிவிக்கப்பட்டது

காலணி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்த பிறகு  பத்திரிக்கைக்குளுக்கும் சுதந்திரம் கிடைத்தது என்றே சொல்லாம். 

அதன்பின் உருவான இந்திய அரசியலமைப்பு சட்டம், மக்களாட்சியில் எழுத்துரிமையையும் பேச்சுரிமையையும் அடிப்படை உரிமைகளாக அறிவித்தது.  அதன் பின்பு அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவது மட்டுமின்றி, மக்களின் பிரச்னைகளை அரசிற்கும் சமூகத்திற்கும் வெளிப்படைத்தன்மையுடன் கொண்டு சேர்ப்பதிலும்,  ‘ ஜெர்னலிசம்’  முக்கிய பங்காக விளங்குகிறது.  

டிவி, இன்டர்நெட், செல்போன் இல்லாத காலகட்டங்களில் மாபெரும் தலைவர்கள் முதல் பாமர மக்கள் வரை நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள செவி வழி செய்தியாக ஆகாசாவாணி இருந்தது

ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது சரோஜ்நாராயணஸ்வாமி”. வானொலியில் வரும் இந்த கம்பீர குரல் வழி செய்திக்காக காலை 7.15 மணிக்கு  தமிழுலகம் முழுவது காத்து இருக்கும்

அதன் பிறகு டிவியிலும் செய்திகள் கிடைத்தது

ஊடகம் என்பது  நம் ஜனநாயக தேசத்தின் நான்காவது தூண். ஊடகத்திற்கு  மிகச் சுருக்கமாக நான்கு வடிவங்கள் உள்ளன.

அவை அச்சு ஊடகம், ஒலி ஊடகம், காட்சி ஊடகம், சமூக ஊடகம். மக்களுக்கும் அரசுக்கும் இடைவேளையில் கண்ணாடி போல் நின்று அனைத்து செய்திகளையும் உலகிற்குச் சொல்லும் மிக பெரிய சாதனம் ஊடகம். 

மனிதன் தனது கருத்துகளையும் உணர்வுகளையும் பிறரிடம் பரிமாறிக்கொள்ள அச்சு ஊடகம் பயனாக இருக்கிறது. அச்சு ஊடக வளர்ச்சியின் அடுத்தப்படி ஒலி ஊடகம். இது தகவல் சென்றடைவதை துரிதப்படுத்தியது. 

அலைபேசி, வானொலி போன்றவை அலை ஊடகத்திற்கு எடுத்துகாட்டாகும். 

தகவல்களை பரிமாரிக்கொள்ளப் புறாவையும், விலங்குகளையும் தூதனுப்பிய மனிதன் இன்று காற்றிலும் தூதனுப்புகிறான். ஒலி ஊடக வளர்ச்சியின் அடுத்தப் படி காட்சி ஊடகம். 

காட்சி ஊடகம் என்பது ஒலி மற்றும் ஒளி சார்ந்த கலவை. ஒரு காட்சி வெறும் காட்சிகளை மட்டும் காட்டி மறைந்துவிடுவது இல்லை. 

பார்வையாளர்கள் மத்தியில் கருத்துகளை விதைகளாகத் தூவுகிறது. இதன் தொடராக இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்பாட்டில் உள்ள ஊடகம் சமூக ஊடகம்.

சமூக ஊடகம் என்பது இன்று வலைத்தளங்களின் வழியாக தகவல்களையும் கருத்துக்களையும் விரைவாக  அனைத்து மக்களிடமும்  சென்றடைய செய்வதே சமூக ஊடகம். 

ஊடகங்களின் பங்கு சமூகத்திற்கு உரிமைக் குரலாகவே இருக்கிறது.  ஆகவே தான் ஊடகத்தை நாம் பொது மக்களின் சொத்தாகவே கருதுகின்றோம். 

மக்கள் மத்தியில் ஊடகங்கள் மீது தவறான பார்வை உள்ளது. 

ஊடகங்கள் தவறு செய்வதில்லை மாறாக ஊடகங்களை பயன்படுத்தும் மனிதர்கள் தான் தனது சுய நலத்திற்காக ஊடகத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். 

ஊடகங்களை சமூக மாற்றத்திற்கும் ஆன்மீக மறுமலர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும். 

சமூகத்தில் பரவி கிடக்கும் தீமைகளை களைந்து வேற்றுமைகளை ஒழித்து ஒற்றுமையை வளர்க்க வேண்டும். 

ஊடகம் பற்றிய தெளிவான அறிவு ஆர்வம் அதனைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துரைத்து எழுச்சியுடன் பயணிக்க இந்த நல்ல நாளிலே அட்மின் மீடியா சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Share this