குழந்தை சுஜித் மீட்பு பணிக்கு எவ்வளவு செலவு ஆனது ஆட்சியர் விளக்கம்
அட்மின் மீடியா
0
ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை சுஜித்தை மீட்க 11 கோடி ரூபாய் தமிழக அரசு செலவு செய்துள்ளது என்றும் அங்கு தங்கியிருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் சாப்பாடு உள்ளிட்ட செலவு குறித்த விவரங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் மீட்பு பணிகள் செலவு தொடர்பான தகவல்களை மறுத்து, உண்மையான செலவு கணக்கு அறிக்கையை அளித்துள்ளார்.
அதில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க இயக்கப்பட்ட வாகனங்களுக்கு செலவுத் தொகை கொடுக்கப்படவில்லை. வாகன உரிமையாளர்கள் வேண்டாம் என்று மறுத்து விட்டனர்.
இயந்திரங்களுக்கு டீசல் செலவு மட்டுமே ஆனது. மீட்புப் பணிக்காக 5 ஆயிரம் லிட்டர் டீசல், 5 லட்சம் மட்டுமே செலவாகியது. ஆனால், அதிக செலவானதாக வாட்ஸ்அப்பில் பரப்பப்படும் பொய் செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். அரசுக்கு எதிரான பொய் செய்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags: மறுப்பு செய்தி
