Breaking News

100 அடி ஆழத்தில் அசைவின்றி குழந்தை! 3 வது நாளாக பத்திரமாக மீட்க கடும் முயற்சி

அட்மின் மீடியா
0
திருச்சி அருகே, ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை மூன்றாவது நாளாக தொடரும்  மீட்கும் பணி



பல கட்ட மீட்பு பணிகள் தோல்வியடைந்த நிலையில்

தற்போது சுரங்கம் அமைத்து மீட்பு பணி தொடங்க உள்ளது

ஓ.என் ஜி.சி நிறுவனத்திற்க்கு சொந்தமான குழி தோண்டும் பணிக்காக 98 டன் எடை கொண்ட ரிக் இயந்திரம், மீட்புப் பணி நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்துள்ளது. 


ஆழ்துளை கிணறுக்கு அருகில் 2 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 110 அடி ஆழத்தில்  தோண்டும் பணியை ரிக் இயந்திரம் இன்னும் சில நிமிடங்கள்  தொடங்க உள்ளது.

தோண்டப்படும் இந்த குழியில், தீயணைப்பு வீரர்கள் மூன்று பேர் இறங்கி குழந்தை சுர்ஜித்தை மீட்க உள்ளனர்

36 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தையை மீட்க மீட்புப் படையினர் போராட்டம்
26 அடி ஆழத்தில் இருந்த குழந்தை 
தற்போது 100 அடி ஆழத்தில் உள்ளான்


சுர்ஜித்திற்கு மூச்சிருப்பதாக தெர்மல் கேமராவில் கண்டறியப்பட்டுள்ளது என தகவல் ஆழ்துளை கிணற்றில் 100 அடி ஆழத்தில் உள்ள குழந்தை சுர்ஜித்தின் கை தெரிகிறது - மீட்கும் பணியை தொடங்கவுள்ளது என்எல்சி குழு

ஆழ்துளை கிணற்றில் சுமார் 100 அடி ஆழத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தை சுர்ஜித்தின் கை வெளியே தெரியும் கண்காணிப்பு கேமரா பதிவு வெளியாகியுள்ளது

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback