சுஜித் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்தது முதல் இறப்பு வரை நடந்தது என்ன
அட்மின் மீடியா
0
அக். 25ம் தேதி மாலை 5.40 மணிக்கு
சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான் அப்போது 26 அடி ஆழத்தில் தான் சுஜித் இருந்தான்.
மாலை சுமார் 6 மணிக்கு மேல் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஆழ்குழாய் வழியாக சிறுவனுக்கு ஆக்சிஜன் தரப்பட்டது.
சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான் அப்போது 26 அடி ஆழத்தில் தான் சுஜித் இருந்தான்.
மாலை சுமார் 6 மணிக்கு மேல் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஆழ்குழாய் வழியாக சிறுவனுக்கு ஆக்சிஜன் தரப்பட்டது.
சம்பவ இடத்திற்க்கு உடனடியாகமருத்துவக் குழு , தீயணைப்புத் துறை, வருவாய் துறையினர் வந்து ஆழ்குழாய் கிணற்றிற்க்கு அருகே ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் எடுக்கபட்டு மீட்புப் பணியைத் தொடங்கினர்
அன்று இரவே டேனியல் குழு மீட்புப் பணியில் இறங்கியது. அதன் பின்பு மதுரை மணிகண்டன் குழு மீட்புப் பணியில் ஈடுபட்டு பிரத்யேகக் கருவி மூலம் குழந்தையின் ஒரு கையில் சுருக்கு போடப்பட்டது மேலும் ஸ்ரீதர் தலைமையில் 3ஆவது குழு கோவையில் இருந்து வந்தார்கள்.
அன்று நளளிரவில் குழந்தையின் கையில் போடப்பட்ட சுருக்கு அவிழ்ந்து. சுஜித் 60 அடி ஆழத்திற்குச் செல்லபட்டான் அதன் பின்பு பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. குழந்தை பயப்படாமல் இருக்க, குழிக்குள் விளக்கும், கண்காணிப்பதற்கு கேமராவும் பொருத்தப்பட்டது.
அக். 26 ம் தேதி
நடுக்காட்டுப்பட்டியில் மழை பெய்ய ஆரம்பித்தது மழை நீர் ஆழ்துளைக் கிணற்றுக்குள் செல்லாத வகையில் உடனடியாக தார்ப்பாய் கட்டப்பட்டது
மதியம் என்.எல்.சி, ஓ.என்.ஜி.சி ,தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வருகை தந்தார்கள் ஆனால் அதற்க்குள் 6 0அடியிலிருந்த சுஜித் மெல்ல மெல்ல 80அடிக்கு சென்றுவிட்டான்
அன்று மாலை சுமார் 5 மணியளவில் ஆழ்துளை கிணறுக்கு அருகே குழி தோண்டி குழந்தையை மீட்க முடிவு செய்யபட்டு ரிக் இயந்திரம் வரவைக்கபட்டது அதிகாலை சுமார் 2 மணியளவில் வந்த ரிக் இயந்திரம் நடுக்காட்டுப்பட்டி வந்தடைந்தது. குழந்தை சுவாசிப்பதற்கு ஏற்றார் போல், தொடர்ந்து ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வந்தது.
அக். 27 ம் தேதி
காலை 7 மணியளவில் ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தொடங்கியது
அன்று மதியத்திற்க்குள் 20 அடிக்கு குழித் தோண்டப்பட்டது 20 அடிக்கு மேல் கடின பாறைகள் இருந்ததால் அந்த இயந்திரத்தால் வேகமாக துளையிட முடியவில்லை. இதனால் அந்த டிரில் பிட்டில் பழுது ஏற்பட்டது அந்த பழுதும் உடனடியாக சரிசெய்யப்பட்டது
அந்த இயந்திரத்தை விட அதிக திறன் கொண்ட மற்றொரு ரிக் இயந்திரம் கொண்டுவர ஏற்பாடு செய்யபட்டது..அந்த இயந்திரம் மாலை 5 மணியளவில் வந்து சேர்ந்தது அன்று மாலை மழை பெய்ய ஆரம்பித்ததால் ஆழ்துளைக்கிணற்றில் தண்ணீர் செல்லாமல் இருக்க மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன
அன்று இரவே சுமார் 11 மணியளவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சம்பவ இடத்துக்கு வருகைதந்து பார்வையிட்டார். அப்போது சுமார் 30 அடிக்கு இயந்திரம் துளையிட்டு இருந்தது.
அந்த இயந்திரத்தை விட அதிக திறன் கொண்ட மற்றொரு ரிக் இயந்திரம் கொண்டுவர ஏற்பாடு செய்யபட்டது..அந்த இயந்திரம் மாலை 5 மணியளவில் வந்து சேர்ந்தது அன்று மாலை மழை பெய்ய ஆரம்பித்ததால் ஆழ்துளைக்கிணற்றில் தண்ணீர் செல்லாமல் இருக்க மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன
அன்று இரவே சுமார் 11 மணியளவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சம்பவ இடத்துக்கு வருகைதந்து பார்வையிட்டார். அப்போது சுமார் 30 அடிக்கு இயந்திரம் துளையிட்டு இருந்தது.
அக். 28 ம் தேதி
அன்று அதிகாலை 2-வது சக்திவாய்ந்த் புதிய ரிக் இயந்திரத்தின் மூலம் ஆழம் எடுக்கும் பணி தொடங்கியது
கடினமான பாறைகளால் 2வது இயந்திரத்தின் ட்ரில் பிட் பழுதானாது பழுது சரிசெய்யபட்டு மீண்டும் பணி தொடங்கியது ஆனால் மதியம் வரை புதிய இயந்திரம் மூலம் 5 அடி மட்டுமே தோண்ட முடிந்தது ரிக் இயந்திரங்கள் மூலம் 40அடி ஆழம் தோண்டமுடிந்தது. அதற்க்கும் மேல் கடின பாறைகள் காரணமாக தோண்டமுடியவில்லை
நடுக்காட்டுப்பட்டியில் மழை பெய்ய ஆரம்பித்தது மழை பெய்தாலும் மீட்பு பணி தொடரும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார் 45அடிக்குமேல் பள்ளம் தோண்டமுடியாமல் இயந்திரம் திணறியது
எனவே பள்ளத்தை ஆய்வு செய்ய குழிக்குள் தீயணைப்பு படை வீரர் இறங்கினார். அந்த பாறைகள் மிகவும் கடினமானதாக இருக்கின்றது எனவே வேறு வகையில் தான் துளை போடமுடியும் என்ற முடிவு எடுக்கபட்டு மதியம் 1 மணியளவில் போர்வேல் மூலம் பாரைகளில் துளையிடும் பணி தொடங்கியது .போர்வெல் மூலம் 20 அடிக்கு 5 துளைகள் போடபட்டது
அதன்பின்பு ரிக் இயந்திரம் மூலம் அந்த துளைகள் பெரிதாககும் பணியை தொடர்ந்தது 60 அடிக்கு கீழ் பாறை முடிந்து மண் இருப்பது தெரியவந்தது இரவு 7 மணி வரை ரிக் இயந்திரம் மூலம் 65 அடி வரை குழி தோண்டப்பட்டது
இரவு சுமார் 9.30 மணியளவில் ரிக் இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட குழிக்குள் ஆய்வு செய்ய தீயணைப்பு வீரர் அஜித் குமார் ஏணி மூலம் இறங்கி ஆய்வு செய்தார்.
அக். 29 ம் தேதி
அக். 29 ம் தேதி
ஆழ்குழாய் கிணற்றுக்குள் துர்நாற்றம் வரவே தேசிய பேரிடர் மீட்பு குழு, மாநில பேரிடர் மீட்பு குழு ,
மருத்துவக் குழுவினரின் ஆய்வுக்கு பின் சுஜித் உயிரிழந்தது உறுதி
செய்யப்பட்டது. குழந்தையின் உடலை மீட்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்று அதிகாலை 2.30 மணியளவில் குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டதாக வருவாய் நிர்வாக ஆணையர்தெரிவித்தார். இறுதியில் 80 மணி நேர மீட்புப்பணி பலனளிக்காமல், குழந்தை சுஜித் உயிரிழந்தான்.
இதனையடுத்து சுஜித்தின் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக இடுக்கி போன்ற கருவி மூலம் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து பேரிடர் மீட்புக்குழுவினர் 88 அடி ஆழத்தில் இருந்த குழந்தை சுஜித்தின் உடலை மீட்டனர்.சுமார் அதிகாலை 4 மணியளவில் மீட்டனர்
அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
Tags: முக்கிய செய்தி

