Breaking News

உள்ளாட்சி தேர்தல் வரும் ஆனா வராது,,,,,,,

அட்மின் மீடியா
0
தள்ளி போகிறது உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு உச்சநீதிமன்றத்தில் 4 வாரம் அவகாசம் கோரியது மாநில தேர்தல் ஆணையம்


உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்தக்கோரி திமுக சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அது நடைபெற்று வருகிறது. 

அவ்வழக்கில் அக்டோபர் மாதம் 31-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவோம் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்திருந்தது. 

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட தங்களுக்கு மேலும் 4 வார காலம் அவகாசம் வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் புதிய மனு அளித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போதிய அளவில் இல்லை மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் ஓட்டு மிஷின் குறித்த அறிக்கை இதுவரை மத்திய தேர்தல் ஆனையம் அளிக்காததால் உள்ளாட்சி தேர்தல் குறித்த அட்டவனை உடனடியாக வெளியிடமுடியாது எனவே உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிக்க 4 வாரம் அவகாசம் தேவை என மனு அளித்துள்ளது

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback