Breaking News

நிலவேம்பு கஷாயம் கொடுத்த இரவில் இருமல் மருந்து கொடுத்ததால் சிறுமி இறந்ததா? பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியா
0
மேலப்பாளையத்தை சார்ந்த  மா.ரா நைனா முகம்மது அவர்களின் பேத்தியும்! புரோஷ்கான் அவர்களின் மகளான! தஷ்பிகா (வயது-7)  திருச்சியில் மரணம் அடைந்தார்!இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்! நிலவேம்பு கஷாயம் கொடுத்த இரவில் இருமல் மருந்து கொடுத்ததால் தான் மரணம் நேர்ந்ததாக சொல்லப்படுகிறது! எனவே நிலவேம்பு கஷாயம் குடித்த பிறகு வேறு ஏதும் மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்! என்ற செய்தியினை பலரும் சமூக வலைதளங்கலில் பரவலாக ஷேர் செய்து வருகின்றார்கள்

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது


 
அப்படியானால் உண்மை என்ன?

மேலே உள்ள சம்பவம் திருச்சியில் நடந்தது இல்லை

அந்த குழந்தையின் பெற்றோர்களிடம் இது குறித்து நம் அட்மின் மீடியா சார்பாக விசாரித்தோம் அப்போது அவர்கள் கூறியதாவது:-

அத தகவல் பொய்யானது யாரும் நம்பாதீர்கள். குழந்தை பள்ளியில் நிலவேம்பு கசாயம் குடித்தது உண்மைதான் ஆனால் அது புதன் கிழமை காலையில் குடித்துள்ளார். ஆனால் குழந்தை இறந்தது சனிக்கிழமை காலையில்

பள்ளியில் நில வேம்பு கசாயம் குடித்து குழந்தை நன்றாக தான் இருந்தது. அதற்க்கும் குழந்தை மரனத்திற்க்கும் சம்பந்தம் இல்லை. குழந்தைக்கு ஏற்கனவே பல உடல் பிரச்சனைகள் இருந்தது அதனால் யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள் என்று கவலையுடன் தெரிவித்துள்ளார்கள் 


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள் என அட்மின் மீடியா சார்பாக கேட்டுகொள்கின்றோம்.



Tags: மறுப்பு செய்தி

Share this