Breaking News

டெங்கு கொசு வராமல் இருக்க உடனே இதை செய்யுங்க

அட்மின் மீடியா
1
டெங்கு வராமல் இருக்க என்ன செய்யலாம்

கொசுக்களை ஒழிப்பதே டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் ஒரே வழி. வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசுவலை அமைக்கலாம் வாசலிலும் அதே போல்  நீண்ட கொசுவலை அமைக்கலாம்.

மாலை 6 மணிக்கு முன்பாகவே கொசுவத்தி, கொசு விரட்டி, கொசு ஸ்பிரே போன்றவற்றை பயன்படுத்தி கொள்ளுங்கள்

டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் முட்டையிடும் என்பதால், கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும்.

ஓடோமாஸ் கீரிமை  உடலில் பூசிக்கொள்ளலாம். 

கை, கால் முழுக்க மறைக்கும் பருத்தி ஆடைகளை அணியலாம்
.
வீட்டில் தினமும் வேப்ப எண்ணெயில் விளக்கு ஏற்றினால் அதன் வாசனைக்கு கொசு வீட்டுக்குள் வராது

வீட்டைச் சுற்றியுள்ள சாக்கடையை சரியாக பராமரித்து கொசுமருந்து அடித்து வாருங்கள்

குப்பைத்தொட்டிகள் தேங்காய் மூடிகள் ஆகியவற்றில் கூட தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சிமெண்ட் தொட்டிகள், பூந்தொட்டிகள், ஏர்கூலர், ஏர்கண்டிசனர் ஆகியவற்றில் உள்ள தண்ணீரையும் சுத்தப்படுத்துங்கள்

திறந்தநிலையில் கழிவுநீர் கால்வாய்கள் இருந்தால்  தவறாமல் கொசு மருந்து தெளித்து விடுங்கள்

காய்ச்சல் வந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்லுங்கள் சாதாரண காய்ச்சல் தான் என்று அலட்சியம் வேண்டாம்

3 நாட்களுக்கு மேலான காய்சலுக்கு உடனே ரத்தபரிசோதனை செய்யுங்கள்

காய்ச்சல் வந்த பிறகு, மருத்துவர்களிடம் ஆலோசனை பெறாமல் மருந்துக்கடைகளில் மாத்திரை வாங்கி சாப்பிடாதீர்கள்

காய்ச்சலின் போது நில வேம்புக் கசாயம் குடிக்கலாம், பப்பாளிச் சாறு குடிக்கலாம்

காய்ச்சல் இல்லாதவர்களும் தினமும் 1 முறை நிலவேம்பு கசாயம் குடித்தால் நல்லது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்

Tags: முக்கிய செய்தி

Share this

1 Comments

Unknown

18 October 2019 at 22:35

ஆமாம் கொசுவத்திபயன்படுத்தி நால் வியாதி வரும்<br /><br />