Breaking News

ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன்- உச்சநீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு  சி.பி.ஐ. வழக்கில் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன்  உத்தரவு



ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதான ப.சிதம்பரம் தற்போது டெல்லி திகார் சிறையில் உள்ளார்
கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை செவ்வாய்க்கிழமைக்கு அக்.22 ஆகிய இன்று  நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதன்படி இந்த வழக்கு இன்று , ப.சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும், வெளிநாடு செல்லக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


சிதம்பரத்தை ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்தது சிபிஐ, சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளதால் அவரால் சிறையில் இருந்து தற்போது வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback