Breaking News

சுஜித் முழு உடலையும் மீட்டார்களா? மீட்பில் எழும் சந்தேகங்கள்?

அட்மின் மீடியா
0
கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்தை உயிருடன் மீட்கும் முயற்சி  80 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. ஆனால், மீட்புப் பணிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததால், சிறுவன் சுஜித் உயிரிழந்தான்.



அதன் பிறகு, பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சுஜித்தின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் சிறுவனின் உடலை சவப்பெட்டியில் வைத்து பெற்றோர் ஆரோக்கியராஜ் மற்றும் கலாமேரியிடம் ஒப்படைத்தனர்.


சுர்ஜித்தின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக குழந்தை வைக்கப்பட்டு மணப்பாறை கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூரில் உள்ள கல்லறைத் தோட்டத்தின் குழந்தை சுர்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சுஜித்தின் கல்லறையில் அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.


இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட செய்தியில், ஆழ்துளைக் கிணற்றில் ஏர் லாக் முறையில் கை லாக் செய்யப்பட்டு இருந்தது, ஆனால் மீட்பு முயற்சியின்போது உடலின் ஒரு பாகம் மட்டுமே மீட்கப்பட்டதாகவும், மீதி உடல் பாகத்தை மீட்க முடியவில்லை என்ற ஒரு வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகின்றது

அதேநேரம், மீட்கப்பட்டதாகச் சொன்ன குழந்தையின் உடலை ஊடகங்களுக்கும், மற்றவர்களுக்கும், காட்டாவில்லை

உடல் மீட்டு எடுக்கப்பட்டு, வேகவேகமாக பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யப்பட்டதும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பலர் தங்களது கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்குமா என்றும் பலர் தங்களது கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback