எந்தெந்த மாவட்டங்களுக்கு என்ன அலர்ட்
அட்மின் மீடியா
0
அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் நிலவும், இரண்டு மேலடுக்கு சுழற்சிகளால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது
மேலும் தமிழகத்தில், 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை , திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலுார், மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும். மேற்கண்ட மாவட்டங்களுக்கு, கன மழை பெய்யும் என, மஞ்சள் நிற எச்சரிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலுார் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், மிக கன மழை பெய்யும். இந்த மாவட்டங்களுக்கு, மிக கன மழையை குறிப்பிடும், ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், சில இடங்களில் மிக அதிக கன மழை பெய்யும் என்பதால், இந்த நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் கடும் எச்சரிக்கையாக, 'ரெட் அலெர்ட்' அறிவிக்கப்பட்டு உள்ளது.
https://www.adminmedia.in/2019/10/blog-post_67.html