Breaking News

ஜெய் ஸ்ரீ ராம் கூறமறுத்ததால் கொலைவெறி தாக்குதல் உண்மையா?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினையும் ஓர் வீடியோவையும் ஷேர் செய்து வருகின்றார்கள். அந்த வீடியோவில் ஒருவரை பலரும் அடிக்கின்றார்கள் அதற்க்கு ஜெய் ஸ்ரீராம் சொல்ல மறுத்தாதால் அடிக்கின்றார்கள் என ஷேர் செய்கின்றார்கள்


அந்த செய்தி உண்மையா?



உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அப்படியானால் உண்மை என்ன?

பீகாரில் உள்ள கைமூர் என்ற பகுதியில் அக்டோபர் 2 ம் தேதி, சிங் மற்றும் ரெய்ன் ஆகியோர் தனிப்பட்ட பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் செய்யத் தொடங்கினர், ரெய்ன் தனது துப்பாக்கியை வெளியே எடுத்து சிங்கை சுட்டுக் கொன்றார். சிங் உள்ளூர் மக்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிங் இறந்தான்

அதற்க்கு பழிவாங்கும் நடவடிக்கையாக சிங்கின் கூட்டாளி படேல் என்பவன் சிங் சுட்டுக் கொல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே, அவரது நண்பர்கள் சிலர் வந்து ரெயினை  வீதியில் அவர் மேல் உட்காந்து அடிக்கும் அந்த காட்சியைத்தான்  சமுகவளைதளத்தில் தவறாக பரப்பிக்கொண்டுள்ளனர்.
 
அட்மின் மீடியா ஆதாரம்  .




இந்த செய்தியுடன் வரும் வார்த்தை வாக்கியங்களுக்கு மட்டும்தான் அட்மின் மீடியா பொய் என்று மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் நாட்டின் பல பகுதிகளில் ஜெய்ஸ்ரீராம் என்று சொல்ல சொல்லி மக்களை துன்புறுத்துவதும் , கொலை செய்யும் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கடந்த ஜூன் 18-ம் தேதி மோட்டார் சைக்கிள் திருட முயன்றதாகக் கூறி தப்ரேஸ் அன்சாரியை ஜெய்ஸ்ரீராம், என கூறுமாறு ஒரு கும்பல் அடித்தேக் கொன்றது.

அவர் மீது நடத்தப்பட்ட கும்பல் தாக்குதலால்தான் 24 வயது தப்ரேஸ் பலியானார். 

இதில் தொடர்புடைய 11 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தப்ரேஸின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டு தாக்குதலில் ஈடுபட்ட 11 பேர் மீதான கொலை வழக்கும் திரும்பப் பெறப்பட்டது.  

மேலும் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல சொல்லி அடித்து துன்புறுத்தி கொல்லப்பட்ட தப்ரேஸ் வழக்கு கைவிடபட்டத்ற்க்கு  அட்மின் மீடியாவின் ஆதாரம்



இதுபோல் பல பட்டியல் உள்ளது

ஆனால் அதே சமயம் உண்மையை ஆதாரத்துடன் உரக்க சொல்வது மட்டுமே அட்மின் மீடியாவின் தலையாய கடமை

அதை தான் நீங்களும் செய்ய வேண்டும் என்று நாங்களும் எண்ணுகின்றோம்... 

எனவேதான் இந்த செய்திக்கு உண்மை தன்மையை மட்டும் எடுத்துக் கூறியுள்ளோம்

எனவே உண்மையுடன் பொய்யை கலக்காதீர்கள் பொய்யுடன் உண்மையை கலக்காதீர்கள்...

பகுத்தறிவுடன் சிந்தித்து செயல்படுங்கள்...

சொல்வது எங்கள் கடமை 

எனவே பொய்யான செய்திகளை ஷேர் செய்யாதீர்கள்...

Tags: மறுப்பு செய்தி

Share this