Breaking News

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மதரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை உத்தரவு உண்மையா?

அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மதரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை உத்தரவு என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது


தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மதரீதியில் மாணவர்களை அணி திரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்துப்புராணங்கள், இதிகாசங்கள், இந்துத் தலைவர்கள் பற்றிய பிரச்சாரம் பள்ளிகளில் நடப்பதாக அரசுக்கு தகவல் வந்துள்ளது. 

பள்ளி, கல்லூரிகளில் 10 மாணவர்கள் கொண்ட குழுக்களையும் இந்து மாணவர் முன்னணி அமைத்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.  இந்து மாணவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் இந்து மாணவர் முன்னணி குழு அமைந்துள்ளதாக தகவல் பள்ளிக்கல்வித்துறைக்கு கிடைத்துள்ளது. 

இது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளபட வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கல்வித்துறை துணைச்செயலாளர் எஸ்.வெங்கடேசன் அவரச கடிதம் அனுப்பி வைத்துள்ளார்  என்று முதன்மை மீடியாக்கள் அனைத்தும் செய்தி வெளியிட்டது


ஆனால் இந்த செய்தியினை  அமைச்சர் செங்கோட்டையன், மத ரீதியான மாணவர்களை ஒருங்கிணைக்கக் கூடாது என வெளியான சுற்றறிக்கை பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பவில்லை என்றும்  ள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பப்படும் சுற்றறிக்கைகள் முதலமைச்சரின் ஒப்புதலின்றி அனுப்பப்படாது என்றும் தெரிவித்தார்.


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback