சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் யார் ? யார்? விவரங்களை வழங்கியது சுவிட்சர்லாந்து
அட்மின் மீடியா
0
இந்தியா - சுவிட்சர்லாந்து இடையேயான ஒப்பந்தத்தின்படி, சுவிஸ் வங்கியில் கணக்கு
வைத்திருக்கும் இந்தியர்களின், முதல் பட்டியல் இந்தியாவிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டைச் சேர்ந்த ஏராளமான தொழில்
அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்டோர்,
சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி
வைத்துள்ளனர்.
இந்த நிலையில் முதல்முறையாக சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விவரம் குறித்த பட்டியல் இந்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக, இந்தியா - சுவிட்சர்லாந்து இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த
ஒப்பந்தத்தின் அடிப்படையில், சுவிஸ் வங்கியில் கணக்கு
வைத்திருக்கும் பட்டியலை அந்நாடு இந்தியாவுக்கு அளித்துள்ளது.
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்து, யாரேனும்
தங்கள் வருவாயை மறைத்திருந்தால் இப்பட்டியல்
மூலம் கண்டறிய முடியும்.
பட்டியலில்,
தற்போது செயல்நிலையில் இருக்கும் கணக்குகள் மட்டுமன்றி, 2018ம் ஆண்டு வரை
மூடப்பட்ட கணக்குகளின் விவரங்களும் கிடைத்துள்ளன. இரண்டாவது பட்டியல் 2020 செப்., மாதத்தில் இந்தியாவுக்கு
வழங்கப்படும்
ஆனால் இதில் இருப்பவர்களின் பெயர்கள் இன்னும் வெளியாகவில்லை. இதன் மூலம் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்து, யாரேனும் தங்கள் வருவாயை மறைத்திருந்தால் இப்பட்டியல் மூலம் கண்டறிய முடியும்
