ஜல்லிகட்டை பார்வையிட ரஷ்ய அதிபர் தமிழகம் வருகின்றாரா? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
மதுரை அலங்காநல்லூரில் பிரபலமான ஜல்லிக்கட்டு போட்டிகளை காண்பதற்காக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தமிழகம் வருகிறார் என பல மீடியாக்கள் கடந்த 2 நாட்களாக தகவல்கள் வெளியிட்டன
அதாவது மதுரையில் தை மாதம் ஜனவரி மாதம் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண்பதற்காக அவர் தமிழகம் வருகை தருகிறார் என அனைத்து மீடியாக்களும் செய்தி வெளியிட்டது
இந்த தகவல் குறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின் தமிழகத்தில் நடக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வருவதாக ஒரு தகவல் வெளியானது.
இந்த செய்தி தவறானது அதில் உண்மையில்லை எனவும், வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவிஸ் குமார் கூறியுள்ளார்
Tags: மறுப்பு செய்தி