டெங்கு கொசு பற்றி பொய் செய்தி
அட்மின் மீடியா
0
டெங்கு காய்ச்சல் குறித்த பீதி மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் வேளையில், அதுகுறித்த வதந்திகளும் வேகமாக பரவுகிறது
முழங்காலுக்கு கீழ் தான் டெங்கு பரப்பும் ஏடிஸ் கடிக்கும். அதனால் முழங்காலுக்கு கீழ பாதம் வரைக்கும் தேங்காய் எண்ணெய் தேய்க்கணுமாம். அந்த கொசுவால் முழங்காலுக்கு மேல பறக்க முடியாதாம் என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அதன் உண்மைதன்மை என்ன என்று அட்மின் மீடியா களம் கண்டது
டெங்கு கொசு மனிதனை அனைத்து இடத்திலும் கடிக்கும்பொய்யான செய்தியினை நம்பாதீர்கள்
கொசு ஒரு மணி நேரத்தில் 1 முதல் 2 கிமீ / மணி (0.6–1 மைல்) வேகத்தில் நான்கு மணி நேரம் தொடர்ந்து பறக்கக்கூடும், ஒரு இரவில் 12 கிமீ (7.5 மைல்) வரை பயணிக்கும். விநாடிக்கு 450 முதல் 600 முறை வரை இறக்கைகளை அடிக்கும் இவைகளுக்கு
மனிதனின் முழங்காலுக்கு மேல் பறக்கு முடியாது என்பது எவ்வாறு உண்மை என நம்ப முடியும்.
அட்மின் மீடியா ஆதாரம்
மேலும் 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவமனையை நாட வேண்டும். காய்ச்சல்தானே என அலட்சியம் வேண்டாம். அபாய கட்டம் வந்துவிட்டால் அதை குணப்படுத்துவது கடினம் ஆகும்.
Tags: மறுப்பு செய்தி
