இனி லைசன்ஸ் வாங்க 8 போடவேண்டாம்! வந்துவிட்டது புதிய தொழில்நுட்பம்
அட்மின் மீடியா
0
இனி டிரைவிங் லைசன்ஸ் வாங்க 8 போடவேண்டாம்! வந்துவிட்டது புதிய தொழில்நுட்பம் விரைவில் ........
மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள ஹாம்ஸ் என்ற தொழில்நுட்பத்தின் உதவியால் வாகனம் ஓட்டும் திறனை பார்த்து லைசென்ஸ் வழங்கப்படும் முறை உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் சோதனை முயற்சியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் லைசென்ஸ் பெறுவதற்கு '8' போட்டால் போதும் என்ற நிலை இது வரை இருந்து வந்தது.
ஆனால் தற்போது தகுதியான ஓட்டுநர்களுக்கு மட்டுமே லைசென்ஸ் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் சில முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
நீங்கள் லைசன்சஸ் எடுக்க ஒரு மொபைல் போன் உங்கள் முன் பொருத்தபட்டிருக்கும். அந்த ஹாம்ஸ் ஆப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், போனின் முன் மற்றும் பின்பக்க கேமராக்கள், சென்சார்கள் ஆகியவற்றின் மூலம் வாகன ஓட்டுபவரின் திறனை துல்லியமாக கண்காணிக்கிறது.
இந்த தொழில்நுட்பம் மூலம் லைசென்ஸ் பெற விண்ணப்பத்தவர்களில் சுமார் 50 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெறுவதாக கூறப்படுகிறது.
Tags: முக்கிய செய்தி